தென் ஒன்டாரியோ பகுதியில் 3.7 அளவிலான நிலநடுக்கம்
28 தை 2026 புதன் 11:43 | பார்வைகள் : 167
கனடாவின் தென் ஒன்டாரியோ பகுதியில் 3.7 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இயற்கை வள அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் இரவு சரியாக 10.59 மணிக்கு பதிவாகியதாக கனடிய நிலநடுக்க ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் மையப்பகுதி, ஒரிலியா நகரத்திலிருந்து தென்கிழக்கே சுமார் 23 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
நிலநடுக்கம் 5.0 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை எந்த சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
“மிதமான அளவில் மட்டுமே உணரப்பட்டது” என அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இரவு 11 மணியளவில் நில அதிர்வும் குலுக்கமும் உணர்ந்ததாக பிராந்தியத்தின் பல பகுதிகளில் இருந்து மக்கள் சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர்.
சிலர் ஒரு பெரும் சத்தம் கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan