மியன்மாரில் சில நாட்களாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் - பீதியில் மக்கள்
28 தை 2026 புதன் 06:32 | பார்வைகள் : 764
மியன்மாரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இதனால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 25ஆம் திகதி 14 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
இதன்படி, அன்று மாலை 4.13 மணியளவில், ரிச்டரில் 3.6 அளவிலான நிலநடுக்கமும், மாலை 4.27 மணியளவில், ரிச்டரில் 3.5 அளவிலான மற்றுமொரு நிலநடுக்கமும் பதிவானது.
அன்றிரவு 9.52 மணியளவில், ரிச்டரில் 3.9 அளவிலான நிலநடுக்கம் பதிவாகி இருந்தது.
இதேபோன்று, கடந்த 24ஆம் திகதி மியன்மாரில் இரவு 7.48 மணியளவில், ரிச்டரில் 3.4 அளவிலான நிலநடுக்கம் ஒன்று பதிவாகி இருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் உறுதிப்படுத்தியது.
26திகதி காலை 9.03 மணியளவில், ரிச்டரில் 3.6 அளவிலான நிலநடுக்கம் பதிவாகி இருந்தது.
இந்த சூழலில், நேற்று (27) மதியம் 1.04 மணியளவில், ரிச்டரில் 3.4 அளவிலான நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 139 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
இதனால், கடந்த 24ஆம் திகதி ஒரு முறையும், கடந்த 25ஆம் திகதி மூன்று முறையும், நேற்று ஒரு முறையும் இன்றும் என மியன்மாரில் அடுத்தடுத்து 4 நாட்களில் 6 முறை ஏற்பட்டு நிலநடுக்க தாக்கம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan