சனாதன தர்மத்தைப் புறக்கணிக்கும் அரசு மீண்டும் ஆட்சிக்கு வராது; அமித்ஷா
28 தை 2026 புதன் 13:13 | பார்வைகள் : 663
சனாதன தர்மத்தைப் புறக்கணிக்கும் அரசு மீண்டும் ஆட்சிக்கு வராது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் காந்திநகரில் நடந்த நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது: சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்களை ஏமாற்றும் ஒரு அரசாங்கம், இந்த நாட்டில் மீண்டும் ஒருபோதும் ஆட்சிக்கு வராது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
சுதந்திரத்திற்குப் பிறகு, சனாதன மரபுகளைப் பின்பற்றுபவர்கள் நீண்ட காலமாகக் காத்திருந்தனர். சனாதன தர்மத்திற்கு உரிய முக்கியத்துவம் அளித்து அதன் கொள்கைகளின்படி ஆட்சி செய்யும் ஒரு அரசை எதிர்பார்த்தனர்.
சனாதன தர்மத்தைப் புறக்கணிக்கும் அரசு மீண்டும் ஆட்சிக்கு வராது. 370வது பிரிவை ரத்து செய்தல், முத்தலாக் ஒழிப்பு மற்றும் பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்துதல் போன்ற பாஜ அரசின் முக்கிய முடிவுகள் இந்தியாவின் கலாசார மற்றும் ஆன்மிக பாரம்பரியத்திற்கான உறுதிப்பாட்டின் பிரதிபலிக்கிறது. சனாதன தர்மத்தின் மதிப்புகளைப் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan