Paristamil Navigation Paristamil advert login

ஐரோப்பிய சந்தைகள் திறப்பு; முதலீடுகள் அதிகரிக்கும்:பியூஷ் கோயல் உற்சாகம்

ஐரோப்பிய சந்தைகள் திறப்பு; முதலீடுகள் அதிகரிக்கும்:பியூஷ் கோயல் உற்சாகம்

28 தை 2026 புதன் 09:59 | பார்வைகள் : 662


ஜவுளி, ஆடை, வீட்டு அலங்கார பொருட்கள், தளவாடங்கள் போன்ற இந்தியாவுக்கு அதிக தொழிலாளர் நலன் சார்ந்த துறைகளில் ஐரோப்பிய சந்தை முதல்நாளில் இருந்தே திறந்து இருக்கும் , என மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி:  

ஐரோப்பிய யூனியன் 6.5 டிரில்லியன் டாலர் அளவு பொருட்களை இறக்குமதி செய்கிறது. இதில் இந்தியாவின் பங்கு குறைவு. தற்போது 1.5 சதவீதம் மட்டுமே ஐரோப்பாவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது.  தற்போதைய ஒப்பந்தம் மூலம், புதிய துறைகளில் ஐரோப்பிய யூனியன்  சந்தை  திறந்துள்ளது. சேவைத்துறையில் இந்தியா வாய்ப்புகளை திறந்துள்ளது. 94 சதவீத கடலோர பொருட்கள் வரி இல்லாமல் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. ஜவுளி, ஆடை, வீட்டு அலங்கார பொருட்கள், தளவாடங்கள் போன்ற இந்தியாவுக்கு அதிக தொழிலாளர் நலன் சார்ந்த துறைகளில் ஐரோப்பிய சந்தை முதல்நாளில் இருந்தே திறந்து இருக்கும்.

விளக்குகள் அல்லது பிற நுகர்வு பொருட்கள் என இருக்கட்டும், நமது ஏற்றுமதிகள் அனைத்தும் முதல் நாளில் இருந்தே  வரி இல்லாத நிலை ஏற்பட போகிறது.  பொம்மைகள், விளையாட்டு பொருட்கள், ரயில்வே, விமான உதிரிபாகங்கள், தோல் மற்றும்  காலணித்துறை ஆகியவற்றில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது.  ஆட்டோ உதிரிபாகங்கள்,  ஒயின்கள், மதுபானங்கள்  உள்ளிட்ட துறைகளில் இந்தியாவின் சந்தை திறந்து இருக்கும்.

இந்தியாவில் பெரும்பாலும் சிறிய அளவிலான மற்றும் குறைந்த விலை கொண்ட வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன.   இதன் மூலம்   இணக்கமான புரிதலுக்கு வர முடிந்தது.  சிறிய மற்றும் விலை குறைந்த ஆட்டோமொபைல் துறையில்  இந்தியாவின் நலன்களை பாதுகாக்க முடிந்ததில் இந்திய தொழில்துறை மகிழ்ச்சி அடைகிறது.  மேக் இன் இந்தியா திட்டத்தையும், ஐரோப்பிய ஒன்றியத்தின்  தொழில்துறையையும் ஆதரிக்கும்.  இரு தரப்பிலும் முதலீடுக்கு ஏராளமான வாய்ப்புகளை திறந்துவிட்டுள்ளது.

ஐரோப்பாவில் இருந்து இந்தியாவிற்கு வரும் முதலீடுகள் பல மடங்கு உயரக்கூடும்.  இந்தியா -  ஐரோப்பிய யூனியன்  இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இந்தியாவில் அனைத்து தொழில் துறைக்குமான வெற்றி. ஐரோப்பாவுக்குமான வெற்றி.இரு தரப்பிலும் முதலீடுகளுக்குமான ஏராளமான வாய்ப்புகளை திறந்து விடுகிறது. இந்த ஒப்பந்தம் 2026 ம் ஆண்டு அமல்படுத்தப்படும் என்ற நம்புகிறோம். இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்

வர்த்தக‌ விளம்பரங்கள்