விஜய் தேவரகொண்டா படத்திற்கு வந்த புது சிக்கல்...!
27 தை 2026 செவ்வாய் 15:39 | பார்வைகள் : 425
விஜய் தேவரகொண்டாவுக்கு நீண்ட நாட்களாக வெற்றிப்படம் அமையவில்லை. `கீதா கோவிந்தம்` படத்திற்குப் பிறகு சரியான வெற்றி கிடைக்கவில்லை. இதனால் ரசிகர்கள் ஒரு மாபெரும் வெற்றிக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில், `VD14` படம் குறித்த இயக்குனர் ராகுல் சங்க்ரித்யனின் சமீபத்திய போஸ்டர் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ரசிகர்களின் பசியைத் தீர்க்கும் படமாக இது இருக்கும் என இயக்குனர் கூறியிருந்தார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு `ரணபலி` என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 1878-ல் நடந்த கதையை இது காட்டுகிறது. பிரிட்டிஷார் இந்தியர்களை சித்ரவதை செய்து, உணவின்றி சுரண்டியதை இது காட்டுகிறது. சுதந்திரப் போராட்டத்திற்கு முந்தைய இருண்ட ரகசியங்களை இயக்குனர் ராகுல் இதில் காட்டுகிறார். பிரிட்டிஷார் இந்தியாவிலிருந்து 45 டிரில்லியன் டாலர்களை கொள்ளையடித்தனர். 40 ஆண்டுகளில் கோடிக்கணக்கான மக்கள் பட்டினியால் இறந்தனர். இந்த சூழலில் இருந்து ரணபலி தோன்றி, பிரிட்டிஷாரை பழிவாங்கினான்.
இதில் ரணபலியாக விஜய் தேவரகொண்டாவும், ஜெயம்மாவாக ராஷ்மிகாவும் நடிக்கின்றனர். குதிரையில் பிரிட்டிஷ் அதிகாரியை இழுத்துச் செல்லும் விஜய்யின் என்ட்ரி மிரட்டலாக உள்ளது. 1854-1878 காலகட்ட உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த பான்-இந்தியா படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ், படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படம் செப்டம்பர் 11 அன்று வெளியாகிறது.
ரகொண்டா-ராகுல் சங்க்ரித்யன் இணையும் படம் இது. அதேபோல் `கீதா கோவிந்தம்`, `டியர் காம்ரேட்` படங்களுக்குப் பிறகு ராஷ்மிகா மந்தனாவும் விஜய் தேவரகொண்டாவும் ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் இதுவாகும். இப்படத்தில் ரீல் ஜோடியாக நடிக்கும் இவர், ரியல் லைஃபிலும் ஜோடியாக மாற உள்ளார்கள். வருகிற பிப்ரவரி மாதம் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் திருமணம் செய்துகொள்ள உள்ளார்கள்.
ஆனால் விஜய் தேவரக்கொண்டா லுக் பார்க்கும்போது இந்தியன் 2 பட முடிவில் இந்தியன்3 க்கான ஒரு க்ளிம்ப்ஸ் வீடியோ வரும். அதில் வரும் கமல் லுக் மாதிரியே தான் விஜய் தேவரகொண்டா லுக் இருக்கு. அதுமட்டுமல்ல, குதிரைல வர சீன். ப்ரிட்டிஷ் கதைக்களம் என எல்லாமே இரண்டுக்கும் ஒத்துப்போகிறது. இந்தியன் 3-யும் ப்ரிட்டிஷ் கதைகளத்தை வச்சி தான் வருது என பார்ட் 2 ரிலீஸ் டைம்ல படக்குழுவே சொல்லிருந்தாங்க. ஒரு வேளை இந்தியன் 3 கதையத்தான் ரணபலி என்கிற பெயரில் தெலுங்குல எடுக்றாங்ளோ என்கிற கேள்வி இணையவாசிகள் மத்தியில் எழுந்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan