தைராய்டு புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் பற்றி தெரியுமா?
27 தை 2026 செவ்வாய் 15:19 | பார்வைகள் : 567
கழுத்தில் மாற்றங்கள், குரல் மாற்றங்கள், விழுங்குவதில் சிரமம் அல்லது காரணமற்ற இருமல் போன்றவற்றில் கவனம் செலுத்துவது சரியான நேரத்தில் நோயறிதல் மற்றும் பயனுள்ள சிகிச்சைக்கு வழிவகுக்கும்.
இந்தியாவில், குறிப்பாகப் பெண்களிடையே தைராய்டு புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. உலகம் முழுக்க தைராய்டு புற்றுநோய் கண்டறியப்படும் விகிதம் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. உயிர் பிழைப்பு விகிதம் அதிகமாக உள்ள, எளிதில் சிகிச்சை அளிக்கக்கூடிய புற்றுநோய்களில் ஒன்றாக இது இருந்தாலும், அதன் ஆரம்ப அறிகுறிகள் பெரும்பாலும் லேசானவையாகவோ அல்லது வலியற்றவையாகவோ இருப்பதால், பெரும்பாலான நேரங்களில் இது கவனிக்கப்படாமல் விடப்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
நோயறிதலில் ஏற்படக்கூடிய இந்த தாமதம், சிகிச்சையை மேலும் சிக்கலாக்கக்கூடும். உலகளாவிய புற்றுநோய் தரவுகளின் படி, கடந்த இரண்டு தசாப்தங்களாக, குறிப்பாகப் பெண்களிடமும், இளம் வயதினரிடமும் தைராய்டு புற்றுநோயின் பாதிப்பு சீராக அதிகரித்து வருகிறது. ஆய்வுகள் பிராந்திய வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டுகின்றன, குறிப்பாக தென்னிந்தியாவின் சில பகுதிகளில் ஒப்பீட்டளவில் அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இருப்பினும், ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறிகள் பற்றிய விழிப்புணர்வு இன்னும் குறைவாகவே உள்ளது.
"தைராய்டு என்பது கழுத்தின் முன்புறத்தில் அமைந்துள்ள சிறிய, பட்டாம்பூச்சி வடிவத்தில் இருக்கும் ஒரு சுரப்பி ஆகும். இது வளர்சிதை மாற்றம், இதயத் துடிப்பு மற்றும் உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது" என்று பட் பட்கஞ்ச்சில் உள்ள மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின், அறுவை சிகிச்சை புற்றுநோயியல் துறையின் மூத்த இயக்குநரான டாக்டர் நிதின் லீகா கூறுகிறார்.
"ஆரம்பகால தைராய்டு புற்றுநோய் பெரும்பாலும் வலியை ஏற்படுத்தாததால், பலரும் அதன் ஆரம்ப அறிகுறிகளை கவனிக்கத் தவறிவிடுகிறார்கள்" என்றும் அவர்
ஆரம்பத்திலேயே கண்டறிவது மிகவும் முக்கியமானது. ஏனெனில், ஆரம்ப கட்டங்களில் கண்டறியப்படும் போது, தைராய்டு புற்றுநோய்க்கு எளிதில் சிகிச்சையளிக்க முடியும். மேலும் இது, சிறந்த நீண்டகால விளைவுகளையும் அளிக்கிறது. அதுமட்டுமின்றி, எதைக் கவனிக்க வேண்டும் என்பதையும் அறிந்துகொள்வது மிகவும் முக்கியம்.
தைராய்டு புற்றுநோயின் மிகவும் பொதுவான ஆரம்ப அறிகுறி கழுத்தில் கட்டி அல்லது வீக்கம் தோன்றுவதாகும். "பலர் ஷேவ் செய்யும்போதோ, மேக்அப் செய்யும்போதோ அல்லது நகைகள் அணியும்போதோ தற்செயலாக இதைக் கவனிக்கிறார்கள்" என்று டாக்டர் நிதின் லீகா கூறுகிறார்.
பெரும்பாலான தைராய்டு கட்டிகள் தீங்கற்றவையாக இருந்தாலும், புதிதாகத் தோன்றும், வளரும் அல்லது கடினமான எந்தக் கட்டியையும் மருத்துவரிடம் சென்று பரிசோதிக்க வேண்டியது அவசியம்.
வாரக்கணக்கில் குணமாகாத குரல் கரகரப்பு அல்லது குரலில் ஏற்படும் மாற்றம் ஒரு ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம்.
தைராய்டு கட்டி குரல் நாண்களை கட்டுப்படுத்தும் நரம்புகளை பாதிக்கும் போது இது ஏற்படக்கூடும். எனவே, நீடித்த குரல் மாற்றங்களை ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாது.
தைராய்டு சுரப்பி பெரிதாகும் போது அல்லது கட்டி உணவுக்குழாயை அழுத்தும் போது, விழுங்குவது சங்கடமாக மாறும். பலர் வலி இல்லாவிட்டாலும், தொண்டையில் ஏதோ சிக்கிக்கொண்டது போன்ற உணர்வை தொடர்ந்து அனுபவிப்பதாகக் கூறுகிறார்கள்.
சில நேரங்களில், பெரிதாகி வரும் தைராய்டு கட்டி மூச்சுக்குழாயை அழுத்தி, குறிப்பாகப் படுக்கும் போது சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தலாம். இந்த அறிகுறி தோன்றினால் உடனடியாக மருத்துவ உதவி பெறுவது அவசியம்.
தொற்று அல்லது காயம் இல்லாமல் தொடரும் கழுத்து அல்லது தொண்டை வலி கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. "தைராய்டு தொடர்பான வலி சில நேரங்களில் காதுகளுக்கும் பரவக்கூடும். இது பல் அல்லது காது-மூக்கு-தொண்டை பிரச்சனையாக தவறாகக் கருதப்படலாம்" என்று டாக்டர் நிதின் லீகா கூறுகிறார்.
காலப்போக்கில் குறையாத, உறுதியான மற்றும் வலியற்ற நிணநீர் முனைகள் புற்றுநோய் பரவியிருப்பதைக் குறிக்கலாம். இவற்றை, பெரும்பாலும் சாதாரண தொற்றுகளாக கருதி கவனிக்கப்படாமல் விடுவது நோயறிதலில் தாமதத்தை ஏற்படுத்துகிறது.
ஒவ்வாமை, புகைப்பிடித்தல் அல்லது சுவாசத் தொற்றுகளுடன் தொடர்பில்லாத நாள்பட்ட வறட்டு இருமல், தைராய்டு புற்றுநோயின் அதிகம் அறியப்படாத ஒரு அறிகுறியாக இருக்கலாம். தைராய்டு வீக்கம் காரணமாக ஏற்படும் எரிச்சல் இந்த இருமலை தூண்டக்கூடும்.
இந்த அறிகுறிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை இருப்பது தானாகவே புற்றுநோய் இருக்கிறது என்பதைக் குறிக்காது. இருப்பினும், அவற்றை தொடர்ந்து புறக்கணிப்பது, பிற்காலத்தில் சிக்கலான நிலைக்கு வழிவகுக்கலாம்."புற்றுநோய்களில், தைராய்டு புற்றுநோய்க்கு உயிர் பிழைக்கும் விகிதம் மிகவும் அதிகமாக உள்ளது, குறிப்பாக ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால்" என்று டாக்டர் நிதின் லீகா கூறுகிறார்.
நோயறிதலில் பொதுவாக, கழுத்து அல்ட்ராசவுண்ட், இரத்தப் பரிசோதனைகள், ஃபைன்-நீடில் ஆஸ்பிரேஷன் பயாப்ஸி போன்ற பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. புற்றுநோயின் வகையைப் பொறுத்து, சிகிச்சையில் அறுவை சிகிச்சை, கதிரியக்க அயோடின் சிகிச்சை அல்லது இலக்கு வைக்கப்பட்ட சிகிச்சைகள் அடங்கும்.
உடல் தரும் எச்சரிக்கைகளை புறக்கணிக்க வேண்டாம்
தைராய்டு புற்றுநோய் அதன் ஆரம்ப கட்டங்களில் அமைதியாக இருக்கலாம். ஆனால், உடல் நுட்பமான எச்சரிக்கைகளை அனுப்பிக் கொண்டே தான் இருக்கும்.
எனவே, கழுத்தில் மாற்றங்கள், குரல் மாற்றங்கள், விழுங்குவதில் சிரமம் அல்லது காரணமற்ற இருமல் போன்றவற்றில் கவனம் செலுத்துவது சரியான நேரத்தில் நோயறிதல் மற்றும் பயனுள்ள சிகிச்சைக்கு வழிவகுக்கும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan