Paristamil Navigation Paristamil advert login

அரேபியக் கடலில் சிறிய படகு கவிழ்ந்து மூன்று பிரெஞ்சுப் பயணிகள் பலி!

அரேபியக் கடலில் சிறிய படகு கவிழ்ந்து மூன்று பிரெஞ்சுப் பயணிகள் பலி!

27 தை 2026 செவ்வாய் 11:35 | பார்வைகள் : 1047


அரேபியக் கடலில் ஏற்பட்ட இந்த துயரச் சம்பவத்தின் சூழ்நிலைகள் இதுவரை தெளிவாக இல்லை. கிடைத்த தகவலின்படி, மூன்று பிரெஞ்சு சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளனர் என்று காவல்துறையின் தகவலை மேற்கோள் காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் யேமனுக்கு அடுத்துள்ள ஓமான் நாட்டின் கடற்கரைக்கு அருகில் அரேபியக் கடலில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

ஓமான் காவல்துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தகவலின்படி, ஓமான் கடற்கரைக்கு அருகில் ஒரு படகு கவிழ்ந்ததில் மூன்று பிரெஞ்சு சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

25 பிரெஞ்சு சுற்றுலாப் பயணிகளை, சுற்றுலா வழிகாட்டி மற்றும் கப்பல் கப்டன்—ஏற்றிச் சென்ற அந்த படகு, மஸ்கட் நகரில் உள்ள சுல்தான் கபூஸ் துறைமுகத்திலிருந்து 2.5 கடல் மைல் தொலைவில் கவிழ்ந்ததாக காவல்துறை X தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பதைத் தெளிவுபடுத்த விசாரணை நடைபெற்று வருகிறது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்