ஓட்டுநர்களிடையே வேகமாக அதிகரித்து வரும் Dashcams பயன்பாடு!!
27 தை 2026 செவ்வாய் 08:26 | பார்வைகள் : 1277
சாலை பாதுகாப்புக்காக les dashcams (வாகனங்களில் பொருத்தப்படும் கேமராக்கள்) அதிகமாக பயன்படுத்தப்படத் தொடங்கியுள்ளன. கார் முன் கண்ணாடி அல்லது tableau de bord-இல் பொருத்தப்படும் இந்த கேமராக்கள், விபத்துகள் மற்றும் தப்பிச் செல்லும் குற்றங்களை பதிவு செய்து முக்கியமான ஆதாரமாக பயன்படுகின்றன.
சில ஓட்டுநர்கள், இதனால் தங்கள் ஓட்டும் முறையில் மாற்றம் ஏற்பட்டதாகவும், அதிக அமைதியுடன் வண்டி ஓட்டுவதாகவும் கூறுகின்றனர். இந்த கேமராக்களின் விலை பொதுவாக 80 முதல் 300 யூரோக்கள் வரை உள்ளது. பிரான்சில் பல கார் சேவை மையங்களில் இவை தனிப் பிரிவாக விற்பனை செய்யப்படுகின்றன.
விபத்துக்குப் பிறகு அல்லது திருட்டு அச்சம் காரணமாக, அதிகமான மக்கள் இந்த கேமராக்களை வாங்குகின்றனர். இதன் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர். விபத்து விசாரணைகளில் dashcams பதிவுகள் நீதித்துறைக்கு உதவியாக இருந்தாலும், அவை மட்டுமே இறுதி ஆதாரமாக கருதப்படுவதில்லை.
செயற்கை நுண்ணறிவு மூலம் வீடியோக்களை மாற்றக்கூடிய அபாயம் இருப்பதால், பிற ஆதாரங்களுடன் இணைத்து மட்டுமே அவை மதிப்பீடு செய்யப்படுகின்றன. இருப்பினும், சில ஐரோப்பிய நாடுகளில் டாஷ்கேம் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு காப்பீட்டு தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan