Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க போர்க்கப்பல் - ஹவுதி கிளர்ச்சிக்குழு விடுத்த எச்சரிக்கை

 அமெரிக்க போர்க்கப்பல் - ஹவுதி கிளர்ச்சிக்குழு விடுத்த எச்சரிக்கை

27 தை 2026 செவ்வாய் 07:03 | பார்வைகள் : 682


ஈரானில் பொருளாதார நெருக்கடி காரணமாக வன்முறை நடைபெற்று வரும் நிலையில் வன்முறையில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

ஈரான் அரசு வன்முறையை ஒடுக்க கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.

வன்முறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதனால் ஈரான் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற சூழ்நிலை உருவாகி வருகிறது.

அதற்கேற்ப அமெரிக்க போர்க்கப்பல் ஈரானை நோக்கி விரைந்துள்ளது.

இந்நிலையில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், செங்கடலில் வழியாக செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சிக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு, "Soon" என குறிப்பிட்டுள்ளது. ஆனால் விரிவான தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹவுதி கிளர்ச்சிக்குழு செங்கடல் வழியாக சென்ற 100-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது.

வர்த்தக‌ விளம்பரங்கள்