Paristamil Navigation Paristamil advert login

ஒற்றை இலக்கத்தில் சீட்! கமலுடன் தி.மு.க., பேச்சு

ஒற்றை இலக்கத்தில் சீட்! கமலுடன் தி.மு.க., பேச்சு

27 தை 2026 செவ்வாய் 13:07 | பார்வைகள் : 1156


மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலை, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில், தி.மு.க., அமைச்சர்கள் சேகர்பாபு, சாமிநாதன் மற்றும் மா.கம்யூ., மாநிலச் செயலர் சண்முகம் ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர்.

இது குறித்து, ம.நீ.ம., கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:

வரும் சட்டசபை தேர்தலில், 'டார்ச் லைட்' சின்னம் எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, குறைந்தது 12 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என விரும்புகிறோம். அதற்காக, இரட்டை இலக்க தொகுதிகளை, தி.மு.க.,விடம் கேட்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தி.மு.க., கூட்டணியில் ம.நீ.ம., கட்சிக்கு ஒற்றை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்கவும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்து, வெற்றி பெற வைக்கவும், முதல்வர் ஸ்டாலின் தரப்பில், கமலிடம் அமைச்சர் சேகர்பாபு பேசியுள்ளார். எங்கள் விருப்பம் நிறைவேறுமா என தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்