மாணிக்கம் தாகூர், ஜோதிமணிக்கு தேர்தலில் சீட் கொடுக்க விடக்கூடாது; தி.மு.க., எம்.எல்.ஏ.
27 தை 2026 செவ்வாய் 07:47 | பார்வைகள் : 673
மூவாயிரம் ஓட்டுகள் கொண்ட காங்கிரஸில் பூத் கமிட்டிக்குக் கூட ஆள் இல்லை. இந்த லட்சணத்தில் அதுல பங்கு, இதுல பங்கு வேணும் என பேசும் ஜோதிமணி, மாணிக்கம் தாகூருக்கு, லோக்சபா தேர்தலின்போது எம்.பி., சீட் கொடுக்க விடக்கூடாது என மதுரை எம்.எல்.ஏ., தளபதி பேச்சால் தி.மு.க., கூட்டணிக்குள் சர்ச்சை எழுந்துள்ளது.
மதுரையில் நேற்று முன்தினம் இரவு நகர் தி.மு.க., சார்பில் நடந்த மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில் நகர் செயலாளர் தளபதி எம்.எல்.ஏ., பேசியதாவது:
காங்.,கில் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி எப்படியோ எம்.பி.,க்களாகி விட்டனர். மற்றவர்கள் எப்படி போனால் என்ன என்று, தற்போது 'அதுல பங்கு வேணும். இதுல பங்கு வேணும் ' என பேசுறாங்க.
இதைத் தி.மு.க., தலைமை புரிந்து கொண்டு லோக்சபா தேர்தலில் இவர்களுக்கு சீட்டே கொடுக்க விடக் கூடாது. அதுக்கான வேலையை நாம் செய்ய வேண்டும். தி.மு.க., இல்லையெனில் 'இண்டி' கூட்டணியே கிடையாது.
முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தான் இக்கூட்டணியை காப்பாற்றி வருகின்றனர்.
காங்.,க்கு மூவாயிரம் ஓட்டுகளே உள்ளன. பூத் கமிட்டிக்குக் கூட ஆள் இல்லை. ஆனால் அவர்கள் பேசுறது வேதனையாக உள்ளது என்றார்.
இதையடுத்து தளபதிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மாணிக்கம் தாகூர் எம்.பி., அவரது எக்ஸ் தளத்தில், 'இம்முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்., வேட்பாளர் நிற்க வேண்டும் என காங்., தலைவர் கார்கேவிடம் கோரிக்கை வைப்பேன். தன்மானம் காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்து விட்டது' எனத் தெரிவித்துள்ளார். இது தி.மு.க., - காங்., கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
காங்.,க்கு மூவாயிரம் ஓட்டுகளே உள்ளன. பூத் கமிட்டிக்குக் கூட ஆள் இல்லை. ஆனால் அவர்கள் பேசுறது வேதனையாக உள்ளது
மோதலுக்கான பின்னணி
மதுரை தி.மு.க., நகர் செயலாளர் தளபதி தற்போது வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ளார். இத்தொகுதியை காங்., கேட்டு வருகிறது. இதன் பின்னணியில் மாணிக்கம் தாகூர் உள்ளார். இதனால் கடுப்பான தளபதி மதுரை கூட்டத்தில் அவருக்கு எதிராக கொந்தளித்தார். 'தளபதியின் இப்பேச்சு தேவையில்லாதது. கூட்டணிக்குள் புகைச்சலை கிளப்பியுள்ளது' என ஒரு தரப்பும், 'தி.மு.க.,வை அதிகம் விமர்சிக்கும் மாணிக்கம் தாகூருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் என ஒரு தரப்பும் கருத்து தெரிவிக்கின்றனர்






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan