Paristamil Navigation Paristamil advert login

ஈஃபிள் கோபுரத்தில் தங்க எழுத்துகளால் பொறிக்கப்படவுள்ள 72 பெண் விஞ்ஞானிகளின் பெயர்கள்!!

ஈஃபிள் கோபுரத்தில் தங்க எழுத்துகளால் பொறிக்கப்படவுள்ள 72 பெண் விஞ்ஞானிகளின்  பெயர்கள்!!

26 தை 2026 திங்கள் 21:47 | பார்வைகள் : 1608


பரிஸ் நகராட்சி, அறிவியல் துறையில் சிறந்து விளங்கிய 72 பெண் விஞ்ஞானிகளின் பெயர்களை ஈஃபிள் கோபுரத்தில் தங்க எழுத்துகளால் பொறிக்கவுள்ளது. இந்த பெயர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 1889 முதல் அங்கு பொறிக்கப்பட்டுள்ள 72 ஆண் விஞ்ஞானிகளின் பெயர்களுக்கு மேல், இந்த விஞ்ஞானிகளின் பெயர்களும் இடம் பெறும். 

பெண்களின் அறிவியல் பங்களிப்பை வெளிப்படுத்தும் முக்கியமான சின்ன நடவடிக்கையாக இது கருதப்படுகிறது. அதில் கணினி அறிவியலின் முன்னோடியான Alice Recoque, இரு முறை நோபல் பரிசு பெற்ற Marie Curie, கணிதவியலாளர் Sophie Germain உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ளனர். 

இவர்களில் பலர் பொதுமக்களுக்கு அதிகம் அறியப்படாதவர்கள். தங்கள் காலத்தில் புறக்கணிக்கப்பட்ட இந்த பெண்களை இன்று வெளிச்சத்திற்கு கொண்டு வருவதே இந்த முயற்சியின் நோக்கமாகும். இந்த திட்டம் “பெண்களும் அறிவியலும்” என்ற சங்கம் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திய போராட்டத்தின் பலனாகும். 

அறிவியல் ஆராய்ச்சியில் பெண்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடும் “Effet Matilda” எனப்படும் நிலையை சரி செய்வதே இதன் இலக்காகும். தொழில்நுட்ப ரீதியாக சிக்கலான இந்தப் பணிகள் முடிந்து, 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்குள் பெண்களின் பெயர்கள் ஈஃபிள் கோபுரத்தில் பிரகாசிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்