இரு பிரித்தானியர்கள் கைது!!
26 தை 2026 திங்கள் 18:22 | பார்வைகள் : 1841
கடற்கரை மாவட்டமான கலேயில் வைத்து இரு பிரித்தானியர்களை பிரெஞ்சு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஜனவரி 25, நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணி அளவில் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், கலே பகுதியில் தங்கியிருக்கும் அகதிகள் இருவரை தாக்க முற்பட்டதாகவும், அதன் காரணமாகவே அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
35 மற்றும் 50 வயதுடைய இருவரும் காவல்துறையினரின் விசாரணைகளின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
பிரித்தானியாவில் அண்மைய நாட்களாக அகதிகள் வருகையை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அதில் ஒரு அங்கமாக பிரித்தானிய ஆர்ப்பாட்டக்காரர்கள், கலே பகுதிக்கு வருகை தந்து அங்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவ்வாறு வருகை தந்த இருவரும், அகதிகள் மீது தாக்குதல் மேற்கொள்ள முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan