வேலை நிறுத்தத்தால் திணறும் லூவர்! - இன்றும் மூடப்பட்டது!!
26 தை 2026 திங்கள் 15:07 | பார்வைகள் : 1363
லூவர் மியூஸியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இன்று ஜனவரி 26, திங்கட்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதை அடுத்து லூவர் மியூஸியம் மூடப்பட்டது.
உலகின் அதிக பார்வையாளர்களை சந்திக்கும் லூவர், கடந்த வருட இறுதியில் இருந்து வேலை நிறுத்தத்தினால் திணறி வருகிறது. டிசம்பர் நடுப்பகுதியில் இருந்து இருவரை நான்கு நாட்கள் லூவர் மூடப்பட்டுள்ளன. கலாச்சார அமைச்சருக்கும், ஊழியர்களுக்கும் இடையே பல கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்று, அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன.
ஊழியர்களின் ஊதிய பற்றாக்குறையை நிவர்த்திசெய்யக்கோரி இடம்பெறும் இந்த வேலை நிறுத்தத்தினால் இதுவரை பல மில்லியன் யூரோக்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக லூவர் தெரிவிக்கிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan