மீண்டும் இணையும் தனுஷ் மம்முட்டி கூட்டணி?
26 தை 2026 திங்கள் 15:06 | பார்வைகள் : 534
தமிழில் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ் பாஸ்கர் நடிப்பில் உருவாகி தேசிய விருது பெறும் அளவுக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பார்க்கிங் படத்தை இயக்கியவர் ராம்குமார் பாலகிருஷ்ணன். இவர் அடுத்ததாக ரஜினிகாந்த் படத்தை இயக்கப் போகிறார் என்றும் அவருக்கு அந்த கதை பிடித்து விட்டது என்றும் சொல்லப்பட்டு வந்த நிலையில் கடைசி நேரத்தில் அது கைநழுவி போனது. இதனை தொடர்ந்து அவர் அடுத்ததாக தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் என்கிற பேச்சு கடந்த சில நாட்களாகவே ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் தனுஷ் தவிர இன்னொரு முக்கிய கதாபாத்திரமும் இருக்கிறது என்றும் அதில் நடிக்க நடிகர் மம்முட்டியுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் சொல்லப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த 2013ல் மலையாளத்தில் வெளியான கம்மத் அண்ட் கம்மத் என்கிற படத்தில் மம்முட்டியுடன் இணைந்து தனுஷ் ஆகவே ஒரு கெஸ்ட் ரோலில் தனுஷ் நடித்திருந்தார். அந்த வகையில் மீண்டும் பல வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தில் தனுஷ், மம்முட்டி கூட்டணி இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan