Paristamil Navigation Paristamil advert login

குடியரசு என்றால் என்னவென்று கவர்னருக்கு தெரியாது - கனிமொழி எம்.பி

குடியரசு என்றால் என்னவென்று கவர்னருக்கு தெரியாது - கனிமொழி எம்.பி

27 தை 2026 செவ்வாய் 05:38 | பார்வைகள் : 676


வெல்லும் தமிழ்ப் பெண்கள் டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு தஞ்சையில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கனிமொழி எம்.பி. பேசியதாவது;-  

திமுக மகளிர் அணி மாநாட்டிற்கு இரவுபகலாக உழைத்து சிறப்பாக ஏற்பாடுகள் செய்தவர்களுக்கு நன்றி. 14 வயதில் புலி வேல் கொடியேந்தி போராடிய கருணாநிதி பிறந்த மண்ணில் மாநாடு நடக்கிறது. டபுள் இன்ஜின் ஒரு தோல்வி இன்ஜின் என்று நிரூபித்து வருகிறது திராவிட மாடல் அரசு. பாஜக கூறிவரும் டபுள் இன்ஜின் மாடல் காலாவதி இன்ஜின்.    

பலபேர் பல்வேறு திசைகளில் இருந்து பல கனவுகளுடன் தமிழ்நாடு நோக்கி படையெடுக்கிறார்கள். ஆனால் இது ஸ்டாலின் படை. இது வேறு எந்த பக்கமும் திரும்பாது. தமிழக பெண்கள் மிக புத்திசாலிகள். ஸ்கூட்டி தருவேன் என்றார்கள் தந்தார்களா? கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவது திமுக மட்டுமே.  

தமிழகத்தில்தான் தொழில் வளர்ச்சி அதிகம். 38000 தொழிற்சாலைகளில், 42 சதவீதம் பெண் தொழிலாளர்கள். பாஜக ஆட்சி செய்யும் டபுள் இன்ஜின் ஆட்சியில்தான் பெண்களுக்கு எதிராக அதிக குற்றங்கள் நடந்தன.  உங்களின் டபுள் இன்ஜின் ஆட்சியில் தான் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மாநிலங்களில் வளர்ச்சியில் பின் தங்கி உள்ளன.  

கவர்னருக்கு குடியரசு என்றால் என்னவென்றே தெரியவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரையை சட்டமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் கவர்னர் வாசிப்பதில்லை. அரசின் உரையை சட்டமன்றத்தில் படிக்க மாட்டேன் என்று அடம்பித்து அவமதித்து வருகிறார். ஆளுநர் பதவியே வேண்டாம். ரூ.700 கோடி வரை செல்விட வேண்டியுள்ளது.  

பிரதமர் எந்த நேரமும் வெளிநாடுகளில் இருப்பார். தேர்தல் சீசனில் மாநிலங்களுக்கு வருவார். பிரதமர் அண்மையில் தமிழக கூட்டத்தில் தனது 45 நிமிட உரையில் அதிமுக பெயரை உச்சரிக்கவில்லை.  

தமிழகத்திற்கு நிதி எப்போது?, ஓசூர் விமான நிலையம் எப்போது?, என்று மோடி சொல்லிவிட்டு வர வேண்டும். வெள்ள நிவாரணம் எப்போது தருவீர்கள், குழந்தைகளுக்கான நிதியை எப்போது தருவீர்கள் பிரதரே?.   

வர்த்தக‌ விளம்பரங்கள்