Aubervilliers: 1,000 சதுர மீட்டர் பரப்பளவிலான களஞ்சியத்தில் தீ விபத்து!!
26 தை 2026 திங்கள் 13:56 | பார்வைகள் : 2024
Aubervilliers (Seine-Saint-Denis) பகுதியில் உள்ள “Triangle d’Or” எனப்படும் மொத்த விற்பனை நிலைய பகுதியில், ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 9.30 மணியளவில் ஒரு பெரிய களஞ்சியத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
சுமார் 1,000 சதுர மீட்டர் பரப்பளவுள்ள இந்த களஞ்சியம் தீயால் முற்றிலும் சேதமடைந்துள்ளது. தீ விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை. rues de la Haie Coq மற்றும் Gardinoux வீதிகள் சந்திக்கும் மூலையில் அமைந்திருந்த இந்த களஞ்சியத்தில் வாசனை திரவியங்கள், நகைகள் மற்றும் நீச்சல் உடைகளை விற்பனை செய்யும் பல கடைகள் இருந்துள்ளன.
காவல்துறையின் தகவலின்படி, அருகிலிருந்த நான்கு கடைகள் தீயில் முழுமையாக அழிந்துள்ளன; மேலும் சில கடைகள் புகை மற்றும் தீயணைப்பின் போது பயன்படுத்தப்பட்ட நீரால் சேதமடைந்துள்ளன. தீயை கட்டுப்படுத்த சுமார் நூறு தீயணைப்பு வீரர்கள் மற்றும் 42 வாகனங்கள் அனுப்பப்பட்டு, ஆறு நீர்க்குழாய்கள் பயன்படுத்தப்பட்டன.
அதிகாலை 3 மணியளவில் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. தீயின் காரணம் இன்னும் தெரியவில்லை; சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பாரிஸ் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan