வேற லெவல் பண்ணையார்த்தனம்: விஜய்க்கு அ.தி.மு.க., பதிலடி
26 தை 2026 திங்கள் 12:18 | பார்வைகள் : 1266
அ.தி.மு.க.,வை ஊழல் சக்தி என விமர்சனம் செய்த த.வெ.க., தலைவர் வி ஜய்க்கு, அ.தி.மு.க., பதிலடி கொடுத்துள்ளது.
அக்கட்சி ஐ.டி., அணி வெளியிட்ட அறிக்கை:
சட்டத்துக்கு விரோதமாக, தொடர்ந்து 'ப்ளாக்கில் டிக்கெட்' விற்று, அதன் வழியே, பல கோடிகள் கண்ட விஜய்தான் பெரும் ஊழல்வாதி.
மத்திய அரசுக்கு அடிமை என்பது அ.தி.மு.க., வரலாற்றிலேயே இல்லை. மாநில நலனுக்கும், உரிமை களுக்கும், சோதனை வரும் போது, மக்களின் உரிமைகளைப் போராடி பெறுவது அ.தி.மு.க., இயக்கம்.
உங்கள் படம் வெளியாக, அன்றைய முதல்வர் வீட்டில் 5 மணி நேரம் கைகட்டி காத்திருந்ததை சொல்லலாமா? தன் வருமா னத்தை பெருக்க, அதிகார மையத்திடம் மண்டியிடுவ தும் ஊழல்தான் பனையூர் பண்ணையாரே.
அ.தி.மு.க., ஆட்சியில், கல்வி அமைச்சராக இருந்த செங்கோட்டையனை, பக்கத்தில் வைத்துக் கொண்டு, ஊழல் ஆட்சி என்று எங்களை சொல்வதுதான் துாய சக்தியா?
கரூரில் 41 பேரின் மரணத்துக்கு, நீங்களும் ஒரு காரணம்தான். அதற்கான பிராயசித்தங்களை செய்யாமல், என்ன வழக்கு வரப்போகிறதோ என்ற பயத்தில், 72 நாட்கள் பனையூரில் பதுங்கி, 15 நாட்கள் கட்சியின் அலுவலகத்தையே மூடி வைத்தீர்கள்.
அதிலிருந்தே, நீங்கள் எவ்வளவு பெரிய வீர தீரர் என்பது தெரிந்தது. உலக வரலாற்றிலேயே, இறந்தவர்கள் வீட்டுக்கு சென்று ஆறுதல் சொல்லாமல், பனையூருக்கு வரவழைத்து, ஆறுதல் வாங்கி செல்ல வைத்தது, வேற லெவல் பண்ணையார்த்தனம்.
கரூர் சென்று மக்களின் கண்ணீரை துடைக்காமல், கிளிசரின் கண்ணீரோடு, புகைப்படங்களை வைத்து பேருக்கு ஒரு அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அதிலும், கொஞ்சம்கூட குற்ற உணர்வு இல்லா மல், தனக்கு சுய விளம்பரம் செய்தது, ஆபத்தான அரசியலின் அடையாளம். அரசியலில் நல்லவர்களாக இருக்கலாம்; வல்லவர்களாக இருக்கலாம்.
அ.தி.மு.க., குறித்து, மனப்பாடம் செய்து, ஒப்பிக்கும் கருத்து, 'நம்பர் ஒன்' குப்பை. அறிவாலய குப்பையோடு, பனையூர் குப்பையையும் கூட்டி எறிந்து விடுவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan