திருமாவளவனை அடியாள் போல தி.மு.க., பயன்படுத்துகிறது: ஆதவ் அர்ஜுனா
26 தை 2026 திங்கள் 11:17 | பார்வைகள் : 1258
திருமாவளவனை அடியாள் போல, தி.மு.க., பயன்படுத்துகிறது, என, த.வெ.க., தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
மாமல்லபுரத்தில் நேற்று நடந்த, த.வெ.க., செயல் வீரர்கள் கூட்டத்தில், அவர் பேசியதாவது:
தேர்தல் கமிஷனில், விஜய் ரசிகர் இருந்து கையெழுத்து போட்டதால், நமக்கு விசில் சின்னம் கிடைத்திருக்கிறது. தி.மு.க., அமைச்சர்கள், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில், த.வெ.க., 'ஸ்லீப்பர் செல்' இருக்கின்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், என்னை திட்டிக் கொண்டே இருக்கிறார். அவரது கட்சி த.வெ.க.,வுக்கு மாறி விட்டது. தற்போது, அவருடன் 20 பேர் தான் அங்கு இருக்கின்றனர். திருமாவளவனை அடியாள் போல் தி.மு.க., பயன்படுத்துகிறது.
கடந்த 2021க்கு பின், திராவிடம் என்பதற்கு முன், 'திருட்டு' என்பதை இணைத்து, 'திருட்டு தி.மு.க.,'வாக்கி விட்டனர். இந்த ஆட்சியில் என்ன சாதனை செய்து விட்டனர்; அதை முறியடிக்கப் போவதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். த.வெ.க., தலைவர் விஜயின் பெயரை சொல்வதற்கே, ஸ்டாலின் பயப்படுகிறார்.
வி.சி., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர், தி.மு.க.,வை 'ஊழல் செய்யாத கட்சி' என சொல்வரா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இரண்டு நிமிடம், ஈ.வெ.ரா-மசாமி பற்றி பேசினால், துாக்கு மாட்டிக் கொள்கிறேன். வரும் தேர்தலில், 5,000 கோடி ரூபாயை இறக்கி, ஓட்டுக்கு 2,000 ரூபாய் கொடுப்பர்.
இவ்வாறு அவர் பேசினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan