Paristamil Navigation Paristamil advert login

பன்முக இந்தியாவைக் கொண்டாடுவோம்: மு.க.ஸ்டாலின் குடியரசு தின வாழ்த்து

பன்முக இந்தியாவைக் கொண்டாடுவோம்: மு.க.ஸ்டாலின் குடியரசு தின வாழ்த்து

26 தை 2026 திங்கள் 09:11 | பார்வைகள் : 1174


இந்தியாவின் 77-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-  

பன்முக இந்தியாவைக் கொண்டாடுவோம்! பரந்து பட்ட இந்தியா! எண்ணற்ற மொழிகள், இனங்கள், பண்பாடுகள், நம்பிக்கைகள் தழைக்கும் நாடு. வேற்றுமையில் ஒற்றுமை என்பது நூற்றாண்டுகள் கடந்த நாட்டுணர்வுப் பண்பு. நாம் அனைவரும் சுயமரியாதை உணர்வுடன், நம்பிக்கையுடன், சுதந்திரத்துடன் வாழும்போது ஒட்டுமொத்த இந்தியாவும் ஒருசேர உயர்கிறது.  

இந்தியாவின் ஒவ்வொரு மொழியும், இனமும், பண்பாடும் தனித்துவமானவை. அவை ஒன்றை ஒன்று மதித்து வளப்படுத்துகின்றன. நமது பலம் என்பது ஒற்றைத்தன்மை அல்ல, பன்முகத் தன்மையே. அந்தப் பன்முகத்தன்மை காக்கப்படுவதே இந்தியாவைக் காக்கும். பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவை போற்றுவோம்! பெருமிதத்துடன் என் மனமார்ந்த குடியரசு தின நல்வாழ்த்துகள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்