Paristamil Navigation Paristamil advert login

6வது முறையாக BBL கிண்ணத்தை வென்று..மகுடம் சூடிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்

6வது முறையாக BBL கிண்ணத்தை வென்று..மகுடம் சூடிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்

26 தை 2026 திங்கள் 05:59 | பார்வைகள் : 184


பிக் பாஷ் லீக் தொடரின் இறுதிப்போட்டியில், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தைக் கைப்பற்றியது.

பெர்த் மைதானத்தில் நடந்த BBL 2025-26 இறுதிப்போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சார்ஸ் அணிகள் மோதின. 

முதலில் ஆடிய சிட்னி அணி 132 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஸ்மித், ஹென்ரிக்ஸ் மற்றும் பிலிப் தலா 24 ஓட்டங்கள் எடுத்தனர். 

ஜய் ரிச்சர்ட்சன் மற்றும் பய்ன் தலா 3 விக்கெட்டுகளும், பியர்ட்மன் 2 விக்கெட்டுகளும், ஹார்டி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 

பின்னர் ஆடிய பெர்த் அணியில் ஃபின் ஆலன் 22 பந்துகளில் 36 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

மிட்செல் மார்ஷ் (Mitchell Marsh) 44 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, 18வது ஓவரில் ஜோஷ் இங்லிஷ் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 6வது முறையாக பிக் பாஷ் லீக் கிண்ணத்தை வென்றுள்ளது. டேவிட் பய்ன் ஆட்டநாயகன் விருதும், சாம் ஹார்பர் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.   

வர்த்தக‌ விளம்பரங்கள்