மகிழுந்தில் இருந்த தனது குழந்தையின் முன்னால் தாய் சுட்டுக் கொலை ! கைது!!
25 தை 2026 ஞாயிறு 13:42 | பார்வைகள் : 924
தாயை சுட்டுக் கொன்ற குற்றச்செயலின் பிரதான சந்தேகநபர் Grasse பகுதியில் RAID மற்றும் BRI பிரிவுகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை, தனது காரில் குழந்தையுடன் இருந்தபோது துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளம் தாயின் கொலைக்கான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சந்தேகநபர் மற்றும் அவருக்கு உதவியதாகக் கூறப்படும் இரு நபர்கள் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.
குடும்ப உள் மோதல் தொடர்பான வழி முன்னுரிமை
Cap-Vert நாட்டைச் சேர்ந்த 25 வயது இளம் பெண், Nice (Alpes-Maritimes) பகுதியில் தனது குழந்தையுடன் மகிழுந்தில் பயணம் செய்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.
குழந்தை லேசான காயங்களுடன் உயிர் தப்பியது.
சந்தேகநபர், 1980ஆம் ஆண்டு போர்த்துக்கலில் பிறந்தவர், Grasse பகுதியில் RAID மற்றும் BRI படையினரால் கைது செய்யப்பட்டார். அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு உதவியதாக இரு நபர்கள் காவலில் உள்ளனர். அவர்களில் ஒருவரால் சந்தேகநபர் தங்கவைக்கப்பட்டதாக சந்தேகம்.
சம்பவம் எப்படி நடந்தது
கடந்த புதன்கிழமை மாலை 18.00 மணிக்குப் பிறகு, நகரின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு lycée அருகே இந்த தாக்குதல் நடந்தது. சிற்றுந்துருளி(ஸ்கூட்டரில்) வந்த ஒருவர், மகிழுந்தை அணுகி, ஓட்டுநரின் பக்க சாளரத்தை நோக்கி நெருக்கமான தூரத்தில் சுமார் பத்து முறை துப்பாக்கி சூடு செய்ததாக Nice நகரின் வழக்கறிஞர் Damien Martinelli தெரிவித்தார்.
«Boulevard Napoléon III மற்றும் Avenue Henri Matisse சந்திப்புக்கு முன்பாக, 9 mm அளவிலான பல தோட்டாக்கள் தரையில் கிடந்தன» என்றும் அவர் குறிப்பிட்டார்.
தீயணைப்பு வீரர்கள் விரைவாக வந்தபோதும், இளம் தாயை மீட்டெடுக்க முடியவில்லை. ஆனால், பயணியர் இருக்கையில் இருந்த 7 மாத குழந்தை உயிர் தப்பியது.
குடும்பஉள் மோதல் தொடர்பான விசாரணை!
தாக்குதல் முறையைப் பார்த்தபோது, இது «ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயலுடன் தொடர்புடைய கொலை» என கருதப்பட்டாலும், விசாரணையாளர்கள் «குடும்பஉள் மோதல்» தொடர்பான தகவல்களையும் சேகரித்துள்ளனர். அவர்கள், பாதிக்கப்பட்ட பெண்ணின் காதலனின் மாமனாரை விசாரணையில் கவனத்தில் எடுத்துள்ளனர்.
அவர் கடந்த வாரம், காதலனின் தாய்மீது கடுமையான வன்முறை செய்ததாகக் கூறி காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
குழந்தைக்கு ‘pupille de Nice’ அந்தஸ்து
கொல்லப்பட்ட இளம் தாயின் குடும்பத்துக்கு பாதிக்கப்பட்டோருக்கான உதவி அமைப்பு மூலம் ஆதரவு வழங்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Nice நகர மேயர் Christian Estrosi, X-இல் வெளியிட்ட செய்தியில் «தாயை இழந்த இந்தச் சிறு குழந்தை எனது கவலையின் மையமாக உள்ளது. குடும்பத்தினரைச் சந்தித்த பிறகு, இந்தக் குழந்தைக்கு ‘pupille de Nice’ அந்தஸ்தை வழங்க பரிந்துரைக்கிறேன், அது அவன் பெரியவராகும் வரை பாதுகாப்பாக வளர உதவும்» எனவும் தெரிவித்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் செல்வரத்தினம் இராசம்மா
Roissy en brie (பிரான்ஸ்), யாழ்ப்பாணம் வண்வடமேற்கு
வயது : 87
இறப்பு : 12 Jan 2026
-
125






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan