Paristamil Navigation Paristamil advert login

அழுத்தத்திற்கு அடங்கிப் போகும் ஆள் நான் இல்லை: விஜய் பரபரப்பு பேச்சு

அழுத்தத்திற்கு அடங்கிப் போகும் ஆள் நான் இல்லை: விஜய் பரபரப்பு பேச்சு

25 தை 2026 ஞாயிறு 13:38 | பார்வைகள் : 746


தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் விஜய் பேசியதாவது:

மிக முக்கியமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம் என்பதை அழுத்தமாகச் சொல்லிக் கொள்கிறேன். நமக்கு ஏதாவது அழுத்தம் இருக்குமோ என்று நினைக்கிறீர்களா? அழுத்தமா? நமக்கா? அதெல்லாம் இல்லை. இந்த மாதிரி அழுத்தங்களுக்கு எல்லாம் அடங்கிப் போகிற ஆளா நான்?  

அழுத்தம் இருக்கிறதா என்று கேட்டால், அழுத்தம் உள்ளது; ஆனால் நமக்கு இல்லை. மக்களுக்கு இருக்கிறது. மாற்றி மாற்றி ஏமாந்த மக்கள் அழுத்தத்தில் இருக்கின்றனர். தவெகவை மக்கள் நம்புகின்றனர். அடிமையாக இருக்க நான் அரசியலுக்கு வரவில்லை.விஜய் இப்போதுதான் வந்திருக்கிறார். இவருடன் யார் வரப்போகிறார்கள் என்று நம்மை குறைத்து மதிப்பிடுகிறார்கள். 30 வருடங்களாக நம்மை குறைத்து மதிப்பிடுகிறார்கள். ஆனால் மக்கள் நம்மை சரியாக மதிப்பிடுகிறார்கள்.

ஊழல் செய்யவே மாட்டேன். ஒரு பைசாவையும் தொட மாட்டேன். எனக்கு அதைத் தொட வேண்டிய அவசியம் இல்லை. ஒரு துளி ஊழல் கூட படிய விட மாட்டேன். மக்கள் எனக்கென்று. பாஜகவிடம் அதிமுக நேரடியாக சரண் அடைந்துவிட்டது.திமுக தீய சக்தி.  தவெக மீது மக்களுக்கு நம்பிக்கை வரும் வகையில் கட்சியினர் செயல்பட வேண்டும்  என்ன சூழ்ச்சி செய்தாலும் அழுத்தம் கொடுத்தாலும் அடங்கிப் போக மாட்டேன்.

தப்பு செய்தால் யாராக இருந்தாலும் தப்பிக்கவே முடியாது என்ற பயம் இருக்க வேண்டும். தயவு செய்து எல்லோரும் ஒற்றுமையாக இருந்து வேலை செய்ய வேண்டும். யாருக்காகவும், எதற்காகவும் நம் அரசியலை நாம் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. ஆளுங்கட்சிக்கு மற்றும் ஆண்ட கட்சிக்கு பூத் என்றால் என்ன தெரியுமா? கள்ள ஓட்டு போடும் இடம். நடைபெறவுள்ள தேர்தல் ஒரு ஜனநாயகப் போர்; இந்த ஜனநாயகப் போரில் முன்னணியில் நிற்கக் கூடிய நீங்கள்தான் தளபதிகள். முழித்துக் கொண்டிருக்கும் போதே முழியை தோண்டி எடுத்துச் செல்லக்கூடியது இந்த தீய சக்தி

இவ்வாறு அவர் பேசினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்