அரைத்து வைத்த சிக்கன் குழம்பு !
25 தை 2026 ஞாயிறு 13:05 | பார்வைகள் : 164
பொதுவா சிக்கனில் பல்வேறு வகையான உணவுகளை சமைத்து இருப்போம். பிரியாணி,65 ,பெப்பர் சிக்கன், என சொல்லிக் கொண்டே போகலாம். அத்தனை வகையான உணவுகளை ருசித்திருப்போம். அதில் ஒன்றுதான் ருசியான அரைத்து வைத்த சிக்கன் குழம்பு .
தேவையான பொருட்கள்: சிக்கன் 3/4 கிலோ , எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், மிளகு ஒரு டேபிள் ஸ்பூன், சீரகம் ஒரு டேபிள் ஸ்பூன், வெந்தயம் ஒரு டேபிள் ஸ்பூன், தேங்காய், சோம்பு ஒரு ஸ்பூன், பட்டை, லவங்கம், கிராம்பு, ஏலக்காய், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு, மஞ்சள் தூள், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு பேஸ்ட், கரம் மசாலா, கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய்.
செய்முறை விளக்கம்: முதலில் ஒரு கடாயில் அரை ஸ்பூன் எண்ணெய், மிளகு, சீரகம், வெந்தயம், சோம்பு, லவங்கம், கிராம்பு, ஏலக்காய், பட்டை நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். அத்தோடு தேங்காயை சேர்த்து வறுக்க வேண்டும். பின்னர் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுத்து ஆறியதும் இவை அனைத்தையும் ஒரு பேஸ்ட் ஆக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
மற்றொரு கடாயில் எண்ணெய் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வதங்கியவுடன் அதோடு கழுவி வைத்த சிக்கனை சேர்த்து இஞ்சி, பூண்டு பேஸ்ட் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அரைத்து எடுத்து வைத்துள்ள வறுத்த அறைத்த மசாலா பேஸ்டை சிக்கனோடு சேர்த்து நன்கு தாராளமாக தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் அடுப்பை மீடியம் ஆகவும் 15 நிமிடம் லோ ஃபிளேமிலும் வைத்து பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு கருவேப்பிலை கரம் மசாலா தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் சேர்த்து நிமிடம் கழித்து எடுத்தால் சுவையான அரைத்து வைத்த சிக்கன் குழம்பு ரெடி.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் செல்வரத்தினம் இராசம்மா
Roissy en brie (பிரான்ஸ்), யாழ்ப்பாணம் வண்வடமேற்கு
வயது : 87
இறப்பு : 12 Jan 2026
-
125






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan