பாஜவைக் கண்டு விஜய்க்கு அச்சம்: சொல்கிறார் திருமா
25 தை 2026 ஞாயிறு 13:55 | பார்வைகள் : 711
பாஜ அல்லது மோடி அரசை வெளிப்படையாக எதிர்க்க விஜய் தயாராக இல்லை, அச்சப்படுகிறார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: பாஜ தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வர கட்சிகளை எல்லாம், மறைமுகமாக பல்வேறு உத்திகளை கையாண்டு, மிரட்டி வருகிறது. அப்படி, தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்க்கும் பாஜவினர் மறைமுகமாக அழுத்தத்தை தருகிறார்கள், அச்சுறுத்தி வருகிறார்கள் என்பது பலரும் யூகித்து சொல்கிற செய்தியாக தான் இருக்கிறது.
அதில் நானும் ஒருவர், அந்த அளவுக்கு விஜய்க்கு நெருக்கடியை பாஜ தருகிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. விஜய் அந்த நெருக்கடிக்கு ஆளாகி, நிர்பந்தத்திற்கு ஆளாகி அந்த கூட்டணியில் இடம்பெறுவார் ஆனால், அவருடைய அரசியல் என்பது கேள்விக்குறியாகி விடும். அவரை மட்டுமின்றி அவருக்கு வியூகத்தை வகுத்து தருகிற, குறிப்பான சில நபர்களையும் பாஜ விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்துவதாக தகவல் வந்து இருக்கின்றன. எனவே விஜயை பாஜ தலைமையிலான கூட்டணியில் இணைக்க வேண்டும் என்ற ஒரு முயற்சி ஒருபுறம் நடக்கிறது என்பதை யாரும் மறுக்க இயலாது.
அந்த அடிப்படையில் தான் நான் இந்த கருத்தை சொன்னேன். ஜனநாயகன் பட விவகாரத்தில் அரசியல் தலையீடு இருக்கிறது என்ற விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. அப்படி அரசியல் தலையீடு, குறிப்பாக பாஜ தலையீடு இருக்கிறது என்றால், விஜய் அதை வெளிப்படையாக பேசி இருக்க வேண்டும். அவர் பேச வேண்டும். ஆனால் மவுனமாக இருக்கிறார். அவரை தடுப்பது எது என்ற கேள்வி எழுகிறது.
நீதிமன்றங்கள் மட்டுமே இதில் நெருக்கடி தருகிறதா? அல்லது பாஜ.,வும் சேர்ந்து அவர் படம் வெளியாகாமல் இருப்பதை தடுப்பதற்கு நெருக்கடிகளை தருகிறதா? என்ற கேள்விக்கு விஜய் மட்டும் தான் பதில் சொல்ல முடியும். ஒன்று மட்டும் வெளிப்படையாக தெரிகிறது, அவர் பாஜ அல்லது மோடி அரசை வெளிப்படையாக எதிர்க்க தயாராக இல்லை. அச்சப்படுகிறார் என்று மட்டும் தெரிகிறது. இந்த அச்சம் ஏன்? என்பதை மக்களிடையே அவர் தெளிவுப்படுத்தினால் அவருடைய எதிர்காலத்திற்கு நல்லது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் செல்வரத்தினம் இராசம்மா
Roissy en brie (பிரான்ஸ்), யாழ்ப்பாணம் வண்வடமேற்கு
வயது : 87
இறப்பு : 12 Jan 2026
-
125






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan