ரவி மோகனின் 'கராத்தே பாபு' டீசர்... எப்படி இருக்கு?
24 தை 2026 சனி 14:51 | பார்வைகள் : 429
டாடா படத்தை இயக்கிய கணேஷ் கே பாபுவின் அடுத்த படம் கராத்தே பாபு. இதில் ரவிமோகன் ஹீரோ. கே.எஸ்.ரவிகுமார் முக்கியமான வேடத்தில் வருகிறார். தமிழ்நாடு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படம் கோடை விடுமுறைக்கு வெளியாக உள்ள நிலையில், இன்று டீசர் வெளியாகி உள்ளது.
அதை பார்த்தால் கராத்தே பாபு பக்கா அரசியல் படம் என்று தெரிய வருகிறது. குறிப்பாக, கடந்த காலத்தில் நடந்த சில உண்மை சம்பவங்கள், முக்கியமான அரசியல் நிகழ்வுகள், ஆர்.கே நகர் இடைத்தேர்தல், முன்னாள் முதல்வர்கள் குறித்த விஷயங்களுடன் பரபரப்பு கதையாக உருவாகி உள்ளது என்று தெரிகிறது.
வட சென்னையில் பாபு என்ற பெயரில் பல அரசியல் பிரபலங்கள், விஐபிகள் இருக்கிறார்கள். இந்த படத்தில் குறிப்பிடப்படும் பாபு யார்? எந்த பாபுவாக ரவி நடிக்கிறார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. கராத்தே பாபு டீசரில் ரவிமோகன் பேசும், ‛‛நீ தொழிலுக்காக அரசியல் பண்றவன், நான் அரசியலையே தொழிலா பண்றவன்'' என்கிற பன்ச் டயலாக் பரபரப்பாகி உள்ளது.
பிரதர், சைரன், காதலிக்க நேரமில்லை, இறைவன், அகிலன் என அவர் நடித்த படங்கள் தோல்வி அடைந்த நிலையில், இந்த படத்தை அவர் பெரிதும் நம்பியிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளில் அவர் நடித்த பொன்னியின் செல்வன் படமும், வில்லனாக நடித்த பராசக்தி படமும் வெற்றி அடைந்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan