அமெரிக்காவில் கடும் பனிப்புயல் - அவசரநிலை அறிவிப்பு
24 தை 2026 சனி 10:51 | பார்வைகள் : 798
அமெரிக்கா முழுவதும் கடும் பனிப்புயல் நிலவி வரும் நிலையில் 18 மாநிலங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு டெக்சாஸ் மற்றும் ஓக்லஹோமா நகரங்களில் தொடங்கிய இந்த பனிப்புயல், வடகிழக்கு மாகாணங்களுக்குச் செல்லும் போது அதிக பனிப்பொழிவை ஏற்படுத்தும் என வானிலை விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த பனிப்புயல் அமெரிக்கா முழுவதும் 3,200 கிலோமீற்றர் தொலைவுக்கு பரவ வாய்ப்பு உள்ளதாகவும், மத்திய அட்லாண்டிக் மற்றும் வடகிழக்கு மாகாணங்களில் பனி மற்றும் உறைபனி நிலைமைகள் கடுமையாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் , மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் நீண்ட நேர மின்வெட்டு, மரங்களுக்கு சேதம், மற்றும் பயணிக்க முடியாத வீதிப்போக்குவரத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் உணவு, பால், முட்டை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்துள்ளதால், பல கடைகள் வெறுமையாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் விமான சேவை பாதிக்கப்பட்டு, 1,800 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பனிப்புயல் காரணமாக 18 மாநிலங்களில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பனிப்புயல் எதிரொலி ஏற்படுவதால் மக்கள் முன்னதாகவே தயாராக இருக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
பனிப்புயல் தாக்கம் அதிகமாகும் போது டாகோட்டாஸ் மற்றும் மிச்சிகன் மாநிலங்களில் வெப்பநிலை சாதாரண நிலையைவிட 30 டிகிரியை விட குறையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சில பகுதிகளில் காற்றின் ஈரப்பதம் 35 முதல் -50 டிகிரிக்கு கீழே செல்லும் என வானிலையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் மக்கள் தேவையான உணவு, நீர், மருந்து மற்றும் தேவையான பொருட்களை முன்கூட்டியே வாங்கிக் கொள்ள வேண்டும் எனவும் வீடுகளில் தங்கிக் கொண்டு, அவசர தேவைகள் தவிர வீதியில் பயணம் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan