Paristamil Navigation Paristamil advert login

செயற்கை நுண்ணறிவால் Société Générale மற்றும் BNP Paribas வங்கி பணியாளர்களுக்கு ஆபத்து!!

செயற்கை நுண்ணறிவால் Société Générale மற்றும் BNP Paribas  வங்கி பணியாளர்களுக்கு ஆபத்து!!

24 தை 2026 சனி 08:42 | பார்வைகள் : 513


வங்கித் துறையில் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியின் காரணமாக பெரிய அளவில் பணியிட நீக்கங்கள் நடைபெற்று வருகின்றன. Société Générale வங்கியில் பிரான்ஸில் மட்டும் 1,800 வேலைகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், BNP Paribas வங்கி உலகளவில் 1,200 பணியிடங்களையும், பிரான்ஸில் 600 பணியிடங்களை குறைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. 

வங்கி கிளைகள் தொடர்ந்து மூடப்பட்டு வருவதால், ஊழியர்களின் வேலைச்சுமை அதிகரிக்கிறது; அதே நேரத்தில் பல பணிகள் தானியங்கி முறைகளுக்கு மாற்றப்படுகின்றன. இதனால் பிற வங்கிகளின் ஊழியர்களும் எதிர்காலத்தில் தங்களது வேலைகள் ஆபத்தில் உள்ளன என அச்சம் தெரிவிக்கின்றனர்.

இணையத்தள வங்கி சேவைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அதிகரிப்பதால், மனிதர்களின் பங்கு குறைந்து வருகிறது. முன்பு பலர் செய்த அலுவலகப் பணிகளை, இப்போது சிலரே செயற்கை நுண்ணறிவு உதவியுடன் மேற்கொள்ள முடிகிறது. 

வாடிக்கையாளர்களும் ஆலோசகர்களை அணுகாமல், மொபைல் பயன்பாடுகள் மூலம் பங்கு மற்றும் கிரிப்டோ முதலீடுகளை நிர்வகிக்கத் தொடங்கியுள்ளனர். ஒரு ஆய்வின் படி, 2030க்குள் ஐரோப்பாவின் வங்கித் துறையில் சுமார் 2 லட்சம் வேலைகள் செயற்கை நுண்ணறிவால் ஆபத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்