Paristamil Navigation Paristamil advert login

ஜனாதிபதி மக்ரோனால் - விற்பனை உச்சம் கண்ட ’ஹென்ரி-ஜூலியன்’!!

ஜனாதிபதி மக்ரோனால் - விற்பனை உச்சம் கண்ட ’ஹென்ரி-ஜூலியன்’!!

24 தை 2026 சனி 09:00 | பார்வைகள் : 1880


பிரான்சின் ஆடம்பர குளிர்மைக் கண்ணாடிகள் தயாரிக்கும் நிறுவனமான ஹென்ரி-ஜூலியன் திடீரென விற்பனை உச்சம் கண்டுள்ளது. ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனால் இது இடம்பெற்றுள்ளது.

Jura  மாவட்டத்தைச் சேர்ந்த Henry Jullien  நிறுனத்தின் இணையத்தளத்தை ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர். அவர்களது முகப்பில் மக்ரோனது புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர்.

ஜனாதிபதி மக்ரோனின் கண்ணில் ஏற்பட்ட உபாதை காரணமாக நாள் ஒரு குளிர்மைக் கண்ணாடியை அணிந்து வலம் வருகிறார். அவரைச் சுற்றி ஏராளமான ‘மீம்’கள் உலாவிவருகின்றன.

அவர் அணிந்த கண்ணாடிகளில் ஒன்றான ஹென்ரி-ஜூலியன் நிறுனத்தின் ஒரு ‘மொடல்’ பெரும் வைரலான நிலையில், அதனை வாங்குவதற்கு முன்பதிவுகள் வலுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலதிகமாக 1,000 கண்ணாடிகளை உற்பத்தி செய்ய உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 'Pacific' என பெயரிடப்பட்ட அக்கண்ணாடியின் விலை 650 யூரோக்களாகும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்