வீட்டுவசதி நெருக்கடியை சமாளிக்க பிரதமரின் புதிய திட்டம்!!
23 தை 2026 வெள்ளி 20:58 | பார்வைகள் : 2738
அரசு, வீட்டுவசதி நெருக்கடியை சமாளிக்க 2030க்குள் 2 மில்லியன் வீடுகள் கட்டும் இலக்கை அறிவித்துள்ளது. Rosny-Sous-Bois நகரிருக்கு விஜயம் செய்தபோது, பிரதமர் செபஸ்தியன் லெகோர்னு இந்தத் திட்டத்தை வெளியிட்டார். அடுத்த நான்கு ஆண்டுகளில், ஆண்டு ஒன்றுக்கு 4 இலட்சம் வீடுகள் கட்டப்படும் எனவும், வீட்டு வசதி பிரச்சினை நாட்டின் மிக அவசரமான தேவைகளில் ஒன்றாக இருப்பதால் இதை தாமதிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு, கடந்த பத்து ஆண்டுகளில் மிகவும் தீவிரமான வீட்டு வசதி திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. கட்டுமானம் மற்றும் புதுப்பிப்பு பணிகளை பெருமளவில் மீண்டும் தொடங்குவதே இதன் நோக்கம். சமூக வீடுகள் மற்றும் தனியார் வீடுகள், கிராமப்புற மற்றும் நகரப்புற வீடுகள் ஆகியவற்றை எதிரெதிராக நிறுத்தாமல், அதிக நெகிழ்வுத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என பிரதமர் வலியுறுத்தி உள்ளார்.
மேலும், வாடகை முதலீட்டை ஊக்குவிக்க புதிய முதலீட்டு திட்டம் ஒன்றை அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இது பினெல் (Pinel) திட்டத்திற்கு பதிலாக Vincent Jeanbrun என்று பெயரிடப்பட்ட தனியார் முதலீட்டாளர்களுக்கு வரிச் சலுகைகளை வழங்கும் இந்த திட்டம் மூலம் ஆண்டுக்கு சுமார் 50,000 கூடுதல் வீடுகள் கட்டப்படும் என்றும், 500 மில்லியன் யூரோக்களுக்கு மேற்பட்ட வரி வருமானம் உருவாகும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan