Paristamil Navigation Paristamil advert login

டபுள் இன்ஜின் எனும் டப்பா இன்ஜின் தமிழ்நாட்டில் ஓடாது - மு.க.ஸ்டாலின்

டபுள் இன்ஜின் எனும் டப்பா இன்ஜின் தமிழ்நாட்டில் ஓடாது - மு.க.ஸ்டாலின்

23 தை 2026 வெள்ளி 10:30 | பார்வைகள் : 223


பிரதமர் சொல்லும் “டபுள் எஞ்சின்” எனும் “டப்பா எஞ்சின்” தமிழகத்தில் ஓடாது, என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசாரத்தை துவக்கி வைத்து மதுராந்தகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடிபேசும் போது திமுகவையும், திமுக  அரசையும் கடுமையாக விமர்சித்தார்.

இது தொடர்பாக  ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பிரதமர் சொல்லும் “டபுள் எஞ்சின்” எனும் “டப்பா எஞ்சின்” தமிழகத்தில் ஓடாது!

பிரதமர் அவர்களே…

மத்திய பாஜ அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழகம் வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது.

கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க…

நீங்கள் சொல்லும் “டபுள் எஞ்சின்” மாநிலங்களான உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பீஹாரைவிட, தமிழகம், கேரளா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் என உங்கள் “டப்பா எஞ்சின்” நுழையாத மாநிலங்கள்தான் வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்குது.

தமிழுக்கும் தமிழகத்துக்கும் பாஜ செய்யும் துரோகங்களை, நீங்கள் மறைத்தாலும்  தமிழகத்துக்கு தேஜ கூட்டணியின் துரோகம்  என்பதைத் தமிழக மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். டில்லியின் ஆணவத்துக்குத்  தமிழகம்_தலைகுனியாது!

இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்