மணிகண்டனுடன் இணையும் தேசிங்கு பெரியசாமி?
23 தை 2026 வெள்ளி 15:21 | பார்வைகள் : 184
கடந்த 2020 ஆம் ஆண்டு ஒரு கூல் காதல் திரில்லர் படமாக வெளியானதுதான் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம். துல்கர் சல்மான் நடிப்பில் ஒரு சாதாரண கதைதான். ஆனால் அதை மிகவும் சஸ்பென்சாக காதலுடன் கூலாக ஹேண்டில் பண்ணியிருந்தார் அந்தப் படத்தின் இயக்குனரான தேசிங்கு பெரியசாமி. படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றதுடன் வெற்றியும் பெற்றது.
படத்தை பார்த்த ரஜினியும் தேசிங்கு பெரியசாமியை அழைத்து அவரது சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார். கூடவே தனக்கும் ஒரு கதை பண்ண வேண்டும் என்றும் ரஜினி கேட்டிருந்தார். அதற்கேற்ப ரஜினிக்கும் ஒரு கதையை சொன்னார். அது ஒரு ஹிஸ்டாரிக்கல் சம்பந்தபட்ட மிகப்பெரிய பட்ஜெட்டில் அமையும் திரைப்படம். ஆனால் அந்த கதை மேலும் டெவலெப் ஆகவே இல்லை.
அதன் பிறகு சிம்புவின் 48வது படத்தை தேசிங்கு பெரியசாமிதான் இயக்குவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் பட்ஜெட் காரணமாக ராஜ்கமல் அந்தப் படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்து அந்தப் படமே டேக் ஆஃப் ஆகாமல் இருந்தது. ஆனால் சிம்பு அந்தப் படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை கொண்டிருந்தார். அதனால் தேசிங்கு பெரியசாமியை விடாமல் கையில் பிடித்திருந்தார்.
அதே சமயம் தக் லைஃப் படத்தில் சிம்பு கமிட் ஆக தக் லைஃப் முடிந்ததும் இதை ஆரம்பிக்கலாம் என்று சொன்னார். இப்படியே தேசிங்கு பெரியசாமி அவருடைய கெரியரை ஆறு வருடம் வேஸ்ட் செய்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அதனால் பெரிய நடிகர்களை நம்பினால் இப்படித்தான் ஆகும்னு சுதாரித்த தேசிங்கு பெரியசாமி இப்போது நடிகர் மணிகண்டனுடன் இணைந்திருக்கிறார்.
தேசிங்கு பெரியசாமியும் மணிகண்டனும் இணையும் படம் ஜூலை மாதம் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. இந்தப் படத்திற்கு ஓம் பிரகாஷ்தான் ஒளிப்பதிவாளராக வேலை செய்ய இருக்க்கிறார். மணிகண்டனை பொறுத்தவரைக்கும் அவர் கொடுக்கும் எல்லா படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதனால் இந்த காம்போவை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan