Paristamil Navigation Paristamil advert login

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் 4 மணித்தியாலம் பேச்சுவார்த்தை நடத்திய சிறப்புத் தூதர்

 ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் 4 மணித்தியாலம்  பேச்சுவார்த்தை நடத்திய சிறப்புத் தூதர்

23 தை 2026 வெள்ளி 14:39 | பார்வைகள் : 260


உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்காவுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்க ரஷ்ய அதிகாரிகளின் தூதுக்குழு ஒன்று தயாராகி வருவதாக ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் படின் (Vladimir Putin), வெள்ளை மாளிகையின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் தலைமையிலான அமெரிக்கக் குழுவை சந்தித்தார். 
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள சமீபத்தியமுன்னேற்றங்கள் குறித்து விவாதிப்பதற்காக இந்த சந்திப்பு நடந்துள்ளது.

இது குறித்து கிரெம்ளினின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் யூரி உஷாகோவ் வெளியிட்ட அறிக்கையில், "இந்த பேச்சுவார்த்தைகள் சுமார் நான்கு மணிநேரம் நீடித்தன. அவை மிகவும்

சாராம்சமானதாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் இருந்தன. அவை மிகவும் வெளிப்படையானதாகவும், நம்பிக்கையின் அடிப்படையில் நடத்தப்பட்டதாகவும் நான் கூறுவேன்" என்றார்.
மேலும் அவர், அமெரிக்காவுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்க ரஷ்ய அதிகாரிகளின் தூதுக்குழு ஒன்று தயாராகி வருவதாக கூறினார்.

அபுதாபியில் ரஷ்ய, உக்ரேனிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் தங்களின் முதல் முத்தரப்பு சந்திப்பை நடத்தவுள்ளனர் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.   

வர்த்தக‌ விளம்பரங்கள்