தென் சீனக் கடலில் வெளிநாட்டுச் சரக்குக் கப்பல் விபத்து
23 தை 2026 வெள்ளி 09:49 | பார்வைகள் : 1349
தென் சீனக் கடலில் உள்ள சர்ச்சைக்கிரிய ஸ்கார்பரோ ஷோல் பகுதிக்கு அருகே, பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் 21 பேருடன் சென்ற வெளிநாட்டுச் சரக்குக் கப்பல் இன்று (ஜன 23) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
கப்பல் விபத்துக்குள்ளானது குறித்த தகவல் சீனக் கடலோரக் காவல்படைக்குக் கிடைத்தது.
தகவலறிந்தவுடன் இரண்டு மீட்புக் கப்பல்களை சீனா அங்கு அனுப்பிய நிலையில் 13 பேரை பாதுகாப்பாக மீட்கப்பட்டு ,எஞ்சிய 08 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக சீனக் கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.
கப்பல் விபத்துக்குள்ளான பகுதி ஸ்கார்பரோ ஷோல் பகுதி ஆகும். இது , சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கிடையே நீண்டகாலமாக உரிமை கோரப்பட்டு வரும் ஒரு பகுதியாகும்.
அதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமைதான் இப்பகுதியில் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி பிலிப்பைன்ஸ் அரசாங்க விமானத்தை சீன இராணுவம் விரட்டியடித்தது.
தென் சீனக் கடலின் பெரும்பகுதியை சீனா தனது வரைபடத்தின் மூலம் உரிமை கோரி வருகிறது. இதற்கு பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
எனினும் தற்போது மனிதாபிமான அடிப்படையில் இந்த மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டாலும், இராணுவ மற்றும் அரசியல் பதற்றம் காரணமாக இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் உற்றுநோக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan