Paristamil Navigation Paristamil advert login

உலகின் பழமையான குகை ஓவியம் கண்டுபிடிப்பு

 உலகின் பழமையான குகை ஓவியம் கண்டுபிடிப்பு

23 தை 2026 வெள்ளி 06:50 | பார்வைகள் : 191


உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேஷியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த குகை ஓவியம் சுமார் 67,800 ஆண்டுகள் பழமையானது என தெரிவிக்கப்படுகிறது. இந்தோனேசியாவில் கடற்கரையில் உள்ள முனா தீவில் ஒரு குகையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது ஒரு சுண்ணாம்புக் குகையின் சுவரில் மனிதனால் உருவாக்கப்பட்ட பாறை ஓவியங்களை கண்டுபிடித்தனர்.

குகையின் சுவரில் காணப்படும் சிவப்பு நிற கை ஓவியம், இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகவும் பழமையான பாறை ஓவியம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

மற்ற ஓவியங்களில் பறவைகளின் தலைகள் மற்றும் பிற விலங்குகளின் அம்சங்களைக் கொண்ட மனித உருவங்கள் காணப்பட்டன.

குகைச் சுவரில் கைகளை வைத்து, அதன் மேல் நிறமிகளை ஊற்றி இந்த உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் சில விரல் நுனிகள் கூர்மையாக தெரியும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இந்த குகை ஓவியம் சுமார் 67,800 ஆண்டுகள் பழமையானது என்றும் இது ஸ்பெயினில் உள்ள 66,700 ஆண்டுகள் பழமையான நியண்டர்தால் கை அச்சை விட சற்றே பழமையானது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்