Paristamil Navigation Paristamil advert login

அரசாங்கத்துக்கு இரண்டு புதிய தலையிடி!!

அரசாங்கத்துக்கு இரண்டு புதிய தலையிடி!!

23 தை 2026 வெள்ளி 07:00 | பார்வைகள் : 2482


வரவுசெலவுத்திட்டத்தை வாக்கெடுப்பின்றி 49.3 எனும் அரசியலமைப்பு சட்டத்தை பயன்படுத்தி குறுக்குவழியில் நிறைவேற்றியுள்ள பிரதமர் மீது இன்று இரண்டு நம்பிக்கை இல்லா பிரேரணைகளை எதிர்கட்சிகள் கொண்டுவருகின்றன.

ஜனவரி 23, இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு இந்த நம்பிக்கை இல்லா பிரேரணை தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் ஆரம்பமாகிறது.  La France insoumise மற்றும் Rassemblement national கட்சியினர் விடாப்பிடியாக நம்பிக்கை பிரேரணையை நிறைவேற்றுவது என முடிவெடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும், சோசலிச கட்சியும், ரீபபுளிக்கன் கட்சியும் இதற்கு ஆதரவுக்கரம் நீட்டவில்லை. அவர்கள் வாக்களிக்கப்போவதில்லை என சில நாட்கள் முன்னரே அறிவித்திருந்தனர்.

“பிரான்ஸ் எதிர்கொள்ளும் வர்த்தகப்போரின் அச்சுறுத்தலில், அரசாங்கத்தை வீழ்ச்சி பிரான்சை பட்ஜெட் இல்லாமல் விட்டுவிடுவது பொறுப்பற்ற செயலாகும்!” என ரீபபுளிக்கன் கட்சியின் பொதுச் செயலாளர் Laurent Wauquiez தெரிவித்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு நிறைவேற குறைந்தது 288 ஆதரவு வாக்குகள் தேவை எனும் நிலையில் அது சோசலிச கட்சி, ரீபபுளிக்கன் கட்சி, மக்ரோனின் மறுமலர்ச்சி கட்சி போன்ற கட்சிகள் இல்லாமல் சாத்தியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்