பரிஸில் ஒருவரை தடியால் தாக்கும் காவல்துறையினர்: சமூக ஊடகங்களில் பரபரப்பு!!
22 தை 2026 வியாழன் 22:29 | பார்வைகள் : 634
பரிஸில், ஒருவரை காவல்துறையினர் தடியால் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, தேசிய காவல் துறையின் பொது ஆய்வு அமைப்பான IGPN விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ, ஜனவரி 19 அன்று பரிசின் 10-ஆம் வட்டாரத்தில் நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. காட்சிகளில், தலைக்கவசம், அணிந்து தடியும் கவசமும் வைத்திருந்த மூன்று காவல் துறையினர், ஒருவரை பலவந்தமாக வாகனத்தின் அருகே கொண்டு வந்து, அவரின் தலை, கால்கள் மற்றும் முழங்கால்களில் மீண்டும் மீண்டும் தாக்குவது தெளிவாகப் பதிவாகியுள்ளது.
கருப்பு நிற உடை அணிந்திருந்த அந்த நபர் ஓடி தப்பிச் சென்று காட்சியில் இருந்து மறைகிறார். உடனே ஒரே நபரின் குரலில் “விலகு”, “முட்டாள்” போன்ற வார்த்தைகள் கேட்கின்றன. இந்த நிலையில், இந்த வன்முறைகள் வீடியோவின் சூழ்நிலையும், எந்தப் பிரிவைச் சேர்ந்த காவல்துறையினர் என்பதும் இன்னும் தெளிவாகவில்லை.
அவர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். பரிஸ் காவல்துறை கருத்து தெரிவிக்க மறுத்துள்ள நிலையில், இந்த வீடியோ “Cerveaux Non Disponibles” என்ற இன்ஸ்டாகிராமில் பெரும் வைரலாகி உள்ளது. இது, சமீபத்தில் நடந்த El Hacen Diarra மரணத்துக்குப் பிறகு, ஒரு வாரத்திற்குள் IGPN-க்கு ஒப்படைக்கப்பட்ட இரண்டாவது விசாரணையாகும்.
https://www.instagram.com/reel/DTzpatLDIN_/?igsh=MWs0NHVpbnF6d2pxNA==






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan