Paristamil Navigation Paristamil advert login

ரஷ்ய கப்பலை சிறைப்பிடித்த பிரெஞ்சு கடற்படை!!

ரஷ்ய கப்பலை சிறைப்பிடித்த பிரெஞ்சு கடற்படை!!

22 தை 2026 வியாழன் 19:04 | பார்வைகள் : 782


ரஷ்ய கப்பல் ஒன்றை பிரெஞ்சு கடற்படை சிறை பிடித்துள்ளதாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

சிறைபிடிக்கப்பட்டது ஒரு எண்ணை தாங்கி கப்பல் எனவும், இன்று ஜனவரி 22, வியாழக்கிழமை இந்த கப்பல் மத்திய தரைக்கடலில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டு சிறைபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

“இந்த நடவடிக்கை சர்வதேச மற்றும் ஐக்கிய நாடுகளின் கடல் சட்டத்துக்கு இணங்க மறுத்த காரணத்தினால் சிறைபிடிக்கப்பட்டது!” என மக்ரோன் குறிப்பிட்டார்.

Grinch  என பெயரிடப்பட்ட குறித்த கப்பல் ரஷ்யாவின் Murmansk துறைமுகத்தில் இருந்து புறப்பட்டதாகவும், ”மேற்கத்திய தடைகள் இருந்தபோதிலும், ரஷ்யா தனது எண்ணெயைக் கொண்டு செல்ல ரஷ்ய நிழல் கடற்படையைப் பயன்படுத்துகிறது. மற்ற நாடுகளைப் போலவே பிரான்சும் இந்தக் கடற்படைக்கு எதிராகப் போராடுகிறது.” எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்ய எண்ணை விற்பனையே அதன் யுத்தத்துக்கான 40% சதவீத வருவாயை கொண்டுவருகிறது. இதுபோல் ரஷ்யாவின் ’நிழல்’ கப்பல்கள் 600 தொடக்கம் 1,000 வரை உலாவுவதாக கடந்த ஒக்டோபர் மாதம் டென்மார்க்கின் Copenhagen நகரில் இடம்பெற்ற ஐரோப்பிய மாநாட்டில் வைத்து ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்திருந்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்