Paristamil Navigation Paristamil advert login

நியூசிலாந்தில் நிலச்சரிவில் சிக்கி பலர் மாயம்

நியூசிலாந்தில் நிலச்சரிவில் சிக்கி பலர் மாயம்

22 தை 2026 வியாழன் 17:02 | பார்வைகள் : 280


நியூசிலாந்தின் வடக்குத் தீவு முழுவதும் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து பலர் காணாமல் போயுள்ளதாக சர்வதெச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நியூசிலாந்தில் நிலச்சரிவுகளுக்குப் பிறகு காணாமல் போன குழந்தைகள் உட்பட பலரை மீட்புப் பணியாளர்கள் தேடி வருகின்றனர்.

நாட்டின் வடக்குத் தீவின் கிழக்கு கடற்கரை முழுவதும் பலத்த மழை பெய்ததால் வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு சாலைகள் மூடப்பட்டுள்ளன.

வியாழக்கிழமை பிற்பகல், உள்ளூர் நேரப்படி காலை 9:30 மணியளவில் (புதன்கிழமை 20:30 GMT) வடக்குத் தீவில் உள்ள மவுண்ட் மவுங்கானுய் விடுமுறை பூங்காவில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து பலர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.  

வர்த்தக‌ விளம்பரங்கள்