Paristamil Navigation Paristamil advert login

முக்கிய போட்டிக்கு முன்பாக.. திடீரென BBLயில் இருந்து வெளியேறிய பாபர் அஸாம்

முக்கிய போட்டிக்கு முன்பாக.. திடீரென BBLயில் இருந்து வெளியேறிய பாபர் அஸாம்

22 தை 2026 வியாழன் 16:56 | பார்வைகள் : 187


பாகிஸ்தானின் பாபர் அஸாம் BBL சேலஞ்சர் போட்டிக்கு முன்பாக வெளியேறினார். 

BBL எனும் பிக் பாஷ் 2025-26 தொடர் அவுஸ்திரேலியாவின் பல மைதானங்களில் நடந்து வருகிறது. 

இந்தத் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இறுதிப்போட்டியில் விளையாட உள்ள அணியை தீர்மானிக்கும் சேலஞ்சர் போட்டி நாளை நடைபெற உள்ளது.
இப்போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. 

இந்நிலையில், சிட்னி சிக்ஸர்ஸ் அணியில் விளையாடி வந்த பாபர் அஸாம் (Babar Azam) இப்போட்டியில் விளையாடமாட்டார்.

அவர் பாகிஸ்தானின் தேசிய அணியின் பயிற்சி முகாமில் சேருவதற்காக தாயகம் திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.

இது தொடரின் முக்கியமான கட்டத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, அவர் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிட்னி சிக்ஸர்ஸ் அணியும் இதனை உறுதி செய்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு தயாராக பாபர் அஸாம் உடனடியாக அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பிக் பாஷ் இறுதிப் போட்டிக்கு 24 மணிநேரத்திற்கும் குறைவாக இருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்