ஆந்திராவில் சமூக வலைதளங்களை பயன்படுத்த சிறார்களுக்கு கட்டுப்பாடு: மாநில அரசு பரிசீலனை
23 தை 2026 வெள்ளி 08:43 | பார்வைகள் : 215
ஆந்திராவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்க கட்டுப்பாடு விதிப்பது குறித்து பரிசீலனை நடந்து வருகிறது என அம்மாநில அமைச்சர் நாரா லோகேஷ் கூறியுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் தாவோஸ் நகரில் நடக்கும் உலக பொருளாதார மன்றக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் கூறியதாவது:
ஒரு குறிப்பிட்ட வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களில் காணும் உள்ளடக்கத்தை முழுமையாக புரிந்து கொள்வது இல்லை. ஒரு வலுவான சட்டக் கட்டமைப்பு காலத்தின் தேவை. ஒரு குறிப்பிட்ட வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் இதுபோன்ற தளங்களில் இருக்கக்கூடாது. ஏனெனில் தாங்கள் வெளிப்படுத்தும் உள்ளடக்கம்பற்றி அவர்கள் முழுமையாக புரிந்து கொள்வதில்லை. எனவே வலுவான சட்ட கட்டமைப்பு தேவைப்படுகிறது. இவ்வாறு நாரா லோகேஷ் கூறினார்.
ஆஸி., தடை
கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் டிக்டாக், எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்டாப்சாட் மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்து சட்டம் இயற்றியது. இதனடிப்படையில், அந்த வயதுக்கு உட்பட்டவர்கள் புதிதாக சமூக வலைதளங்களில் கணக்கு துவக்க முடியாது. ஏற்கனவே அதில் வைத்துள்ளவர்களின் கணக்கு முடக்கப்பட்டது.
இதனை பின்பற்றி ஆந்திர அரசும், சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க முடிவு செய்துள்ளது. இது செய்யப்பட்டால், இந்தியாவில்சமூக வலைதலங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் முதல் மாநிலம் என்ற பெயர் ஆந்திராவுக்கு கிடைக்கும். இதனை மாநில அரசு தீவிரமாக பரிசீலனை செய்துவருவதாக அம்மாநில ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan