தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் என்னவென்பதை உணர்த்துவோம்: நயினார் நாகேந்திரன்
23 தை 2026 வெள்ளி 05:29 | பார்வைகள் : 100
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
புராணங்கள் போற்றும் புண்ணிய பூமியான செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நாளை மதியம் 12 மணியளவில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திற்கு வருகை தரவிருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை இருகரம் கூப்பி வரவேற்பதில் பெருமை கொள்கிறேன்.
கடந்த நான்கரை ஆண்டுகளாகத் திமுக எனும் தீயசக்தியின் கோரப்பிடியில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கும் தமிழகத்தை மீட்கும் நமது அறப்போராட்டத்தில், தமிழகத்தில் தனி பலம் வாய்ந்த அத்தனை கட்சிகளும் நம்முடன் இணைந்துள்ளன. கட்சி வேறுபாடுகளைக் கடந்து நமது தேசிய ஜனநாயகக் கூட்டணித் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து திமுகவிற்கு எதிராக ஆக்ரோஷமாகக் களமாடி வருகின்றனர்.
இந்நிலையில் நமது கரங்களை மேலும் வலுவாக்குவதற்காகவும், ஓடி உழைக்கும் நம்மை உற்சாகப்படுத்துவதற்காகவும் நம்மை நேரில் சந்திக்க வரும் நமது பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை, கோலாகலமாகக் கொண்டாடி வரவேற்க வேண்டியது நமது தலையாய கடமை. எனவே, நாளை நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் மதுராந்தகமே மலைத்துப் போகுமளவிற்குப் பெருந்திரளாகக் கூடுவோம். நமது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் என்னவென்பதை திமுகவிற்கு உணர்த்துவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan