மக்ரோனின் அவியேட்டர் கண்ணாடிகள்: பிரெஞ்சு பிராண்டுக்கு திடீர் வெற்றி!!
22 தை 2026 வியாழன் 15:54 | பார்வைகள் : 381
ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன் டாவோஸில் (Davos) நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்திலும் பின்னர் எலிசே அரண்மனையிலும், வலது கண் அழற்சி காரணமாக அவியேட்டர் வகை சன்கிளாஸ்களை அணிந்திருந்தார். இந்த தோற்றம் பெரும் கவனம் பெற்றது; சமூக வலைதளங்களில் அது பரவலாகப் பகிரப்பட்டு, சிலர் அவரை Top Gun அல்லது Terminator கதாபாத்திரங்களுடன் ஒப்பிட்டனர்.
டொனால்ட் டிரம்ப் கூட இதைப் பற்றி கிண்டல் செய்திருந்தார். முதலில் ரே-பான் (Ray-Ban) கண்ணாடிகள் என நினைக்கப்பட்ட இவை, உண்மையில் பிரெஞ்சு உயர்தர கண்ணாடி நிறுவனமான Henry Jullien தயாரித்த “Pacific S 01” மாடல் என்பதும் தெரியவந்தது.
இந்த நிகழ்வால், Jura மாகாணத்தின் Lons-le-Saunier நகரில் தனது தயாரிப்புகளை உருவாக்கும் இந்தச் சிறிய நிறுவனம், இணையதளத்தில் பார்வையாளர்கள் வெகுவாக அதிகரித்தனர், ஆன்லைன் கடை தற்காலிகமாக அணுக முடியாத நிலைக்கும் சென்றது. வாடிக்கையாளர்கள் நூற்றுக்கணக்கான கோரிக்கைகளை அனுப்பி, சிலர் அதே மாடலையே துல்லியமாக வாங்க விருப்பம் தெரிவித்தனர்.
ஒரு சன்கிளாஸ்கள் 659 யூரோக்கள் விலையில் விற்கப்படும் இந்த கண்ணாடிகள் முழுவதும் பிரான்ஸிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்று மக்ரோன் விரும்பினார்; மேலும் அவர் அவற்றை பரிசாக ஏற்காமல், தனிப்பட்ட முறையில் வாங்கியதாக நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளார்.
பொதுவாக, ஆண்டுக்கு சுமார் நூறு Pacific மாடல்களை மட்டுமே தயாரிக்கும் இந்த நிறுவனம், தற்போது கிடைத்த கவனத்தைப் பார்த்தால், இந்த ஆண்டு 1,000 வரை தயாரிக்கலாம் என எதிர்பார்க்கிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan