வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா?
22 தை 2026 வியாழன் 15:32 | பார்வைகள் : 314
உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களும் சாப்பிடும் ஒரு பலமாக வாழைப்பழம் இருக்கிறது. இந்த பழத்திற்கு சீசன் எல்லாம் இல்லை.. வருடத்தின் எல்லா நாட்களும் இந்த பழம் எல்லா இடத்திலும் கிடைக்கும். அதோடு ஆப்பிள், ஆரஞ்ச் போன்ற பழங்களின் விலையுடன் ஒப்பிடும்போது வாழைப்பழத்திற்கான விலை மிகவும் குறைவு என்பதால் ஏழை மக்கள் கூட வாழைப்பழத்தை விரும்பி சாப்பிடுகிறார்கள்.
வாழைப்பழத்தில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் இருக்கிறது. மேலும் நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் ஆகிய சத்துக்களும் நிரம்பியிருக்கிறது. அதோடு, வாழைப்பழம் எடை இழப்புக்கு உதவுகிறது. குறிப்பாக வாழைப்பழம் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.. மேலும், குடல் இயக்கத்திற்கும் நன்மை விளைவிக்கிறது..
ஒருபக்கம், வாழைப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது.. சளி, இருமல் தொந்தரவு உள்ளவர்கள் வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாது போன்ற பொதுவான கருத்துக்கள் மக்களிடையே நிலவுகிறது.. அது உண்மையா என பார்ப்போம்.
இரவில் வாழைப்பழம் சாப்பிட்டால் அது உடல் நலத்தை பாதிக்கும் என அறிவியல்ரீதியான ஆதாரங்கள் எதுவுமில்லை. அதே நேரம் ஆயுர்வேத கூற்றுப்படி சளி, பிரச்சனை இருப்பவர்கள் வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாது.. அதிலும் இரவில் வாழைப்பழத்தை எடுத்துக் கொண்டால் அது மூச்சுத் திணறலை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்டிருக்கிறது.. ஏனெனில் வாழைப்பழம் ஒரு கனமான பழம் என்பதால் அதை ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். ஜீரண உறுப்புகள் சிரமப்படும் என ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆயுர்வேதத்தில் இப்படி சொல்லப்பட்டிருக்க அறிவியல் ஆய்வுகள் வேறு மாதிரி சொல்கிறது. வாழைப்பழத்தில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைய இருப்பதால் அவை தூக்கத்தை தூண்டும்.. எனவே இரவில் தூங்க முடியாமல் சிரமப்படுபவர்கள் தூக்கமாத்திரைக்கு பதில் வாழைப்பழத்தை சாப்பிடலாம் என ஆய்வுகள் சொல்கிறது.
அதேநேரம், ஆயுர்வேத மருத்துவத்தின் படி நீரிழிவு பிரச்சினை இருப்பவர்கள், சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், செரிமான பிரச்சனை இருப்பவர்கள், எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள், ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள், தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் இவர்களெல்லாம் இரவு நேரங்களில் வாழைப்பழத்தை தவிர்க்கலாம் என சொல்லப்பட்டிருக்கிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan