Paristamil Navigation Paristamil advert login

ஜனநாயகன் திரைப்படம் எப்போது வெளியாகும்?

ஜனநாயகன் திரைப்படம்   எப்போது  வெளியாகும்?

22 தை 2026 வியாழன் 15:24 | பார்வைகள் : 283


விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தை பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியிட திட்டமிட்டார்கள். ஆனால் கடைசி நேரத்தில் தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்படாததால் சிக்கல் ஏற்பட்டது. மறு தணிக்கை செய்யவேண்டும் என தணிக்கை வாரியம் சொன்னதால் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. முதலில் படத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வந்தாலும் அதை எதிர்த்து தணிக்கை வாரியம் சார்பில் மேல்முறையீடு செய்ததால் ரிலீஸ் தள்ளிப் போனது.

தற்போது இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 20ம் தேதி இது தொடர்பான வழக்கு விசாரணையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தார். அனேகமாக நாளை தீர்ப்பு வெளியாகலாம், ஒருவேளை அது நடக்கவில்லை என்றால் வருகிற 27ஆம் தேதி தீர்ப்பு வெளியாகலாம் என்கிறார்கள்.

படத்திற்கு தணிக்கை சான்றிதழை கொடுங்கள் என தீர்ப்பு வந்துவிட்டால் வருகிற 29ஆம் தேதி படத்தை வெளியிடலாம் என தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருக்கிறார்களாம். ஒருவேளை தணிக்கை வாரியத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் ஜனநாயகன் பிப்ரலில் மட்டுமே வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்