நீஸை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: குழந்தையை காப்பாற்றிய தாய் பலி!!
22 தை 2026 வியாழன் 08:11 | பார்வைகள் : 603
நீஸ் நகரில் புதன்கிழமை மாலை 6 மணியளவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், சுமார் 23 வயதுடைய இளம் பெண் தனது காரில் ஒரு வயதிற்கும் குறைவான குழந்தையுடன் இருந்தபோது உயிரிழந்துள்ளார்.
avenue Henri Matisse மற்றும் boulevard Napoléon III சந்திப்பில், ஸ்கூட்டரில் வந்த ஆண்கள் காரை நோக்கி பலமுறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். தாய் தனது குழந்தையை காப்பாற்ற பயணியர் இருக்கையில் இருந்த குழந்தையின் மீது பாய்ந்துள்ளார் என சாட்சிகள் தெரிவித்துள்ளனர்; குழந்தை காயமின்றி உயிர்தப்பியள்ளது. மீட்புப் பணியாளர்கள் வந்தபோது அந்த பெண் மூச்சடைத்த நிலையில் இருந்தார்; அவரை மீட்டெடுக்க முடியவில்லை. சம்பவத்தை கண்ட பொதுமக்கள் உடனடியாக உதவி செய்தனர். சுமார் இருபது தீயணைப்புப் பணியாளர்கள் சம்பவ இடத்தில் பணியாற்றினர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக அரசு வழக்கறிஞர் விசாரணை தொடங்கி, அதை குற்றப்புலனாய்வு காவல்துறைக்கு ஒப்படைத்துள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயன்படுத்திய ஸ்கூட்டர் எண் பலகை இல்லாமல் ரயில் நிலையம் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நீஸ் நகரில் பெரும் அதிர்ச்சியும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேயர் Christian Estrosi, இந்த அருவருப்பான குற்றம் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் குற்றவாளிகள் விரைவில் பிடிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். விசாரணை தற்போது தொடர்ந்துவரும் நிலையில், இந்த கொலையின் பின்னணி குறித்து அதிகாரிகள் இன்னும் எந்த காரணத்தையும் உறுதிப்படுத்தவில்லை.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan