Paristamil Navigation Paristamil advert login

ஜனாதிபதி மக்ரோன் இணையத்தில் திடீர் ‘வைரல்’!!

ஜனாதிபதி மக்ரோன் இணையத்தில் திடீர் ‘வைரல்’!!

22 தை 2026 வியாழன் 07:00 | பார்வைகள் : 576


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இணையத்தளமெங்கும் வியாபித்துள்ளார். அவர் தொடர்பான ‘மீம்ஸ்’ சமூகவலைத்தளமெங்கும் பகிரப்பட்டு வருகிறது.

சுவிட்சர்லாந்தின் Davos நகரில் உலக வர்த்தக மாநாடு இடம்பெற்றிருந்தது.  இதில் ஜனாதிபதி மக்ரோன் ‘சன்கிளாஸ்’ ஒன்றை அணிந்துகொண்டு வந்திருந்தார். பொதுவாக அரசியல் தலைவர்கள் இதுபோன்ற மாநாடுகளின் போது குளிர்மைக் கண்ணாடிகள் அணிவது நாகரீகமான செயலாக கருதப்படுவதில்லை..

ஆனால், மக்ரோனின் கண்ணில் ஏற்பட்டுள்ள சிறிய உபாதை காரணமாக கடந்த சில நாட்களாக அவர் குளிர்மைக் கண்ணாடி அணிந்து வருகிறார். இந்நிலையில், நேற்றைய மாநாட்டிலும் அவர் கண்ணாடி அணிந்திருந்தமை தற்போது Top Gun அல்லது Terminator போன்ற ஆங்கிலத்திரைப்படங்களின் ஹீரோக்களாக சித்தரிக்கப்பட்டு ‘மீம்’களாக சுற்றி வருகிறது.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் இதேபோன்ற குளிர்மைக் கண்ணாடிகள் அணிந்திருக்கிறார். இன்று ஐரோப்பாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நிலவும் முறுகலில், மக்ரோனை இதுபோன்ற ‘மீம்’  புகைப்படங்களாக்கி உலாவ விட்டுள்ளார்கள் இணையவாசிகள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்