Paristamil Navigation Paristamil advert login

ரூ.99,900-யில் புதிய 2026 TVS Orbiter மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்

 ரூ.99,900-யில் புதிய 2026 TVS Orbiter மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்

22 தை 2026 வியாழன் 05:09 | பார்வைகள் : 139


TVS மோட்டார் நிறுவனம் தனது மின்சார வாகன வரிசையில் புதிய TVS Orbiter Electric Scooter 2026-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.99,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
இந்த ஸ்கூட்டர், 158 கிமீ வரை பயணிக்கக்கூடிய ரேஞ்சுடன் வருகிறது.

வடிவமைப்பில் புதிய ஸ்டைல் கொண்டதுடன், TVS iQube-இன் சில அம்சங்களைத் தழுவியுள்ளது. நீண்ட இருக்கை, விசாலமான கால்தளம், 34 லிட்டர் அண்டர்-சீட் ஸ்டோரேஜ், 169 மிமீ ground clearance ஆகியவை தினசரி பயணத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. 
முக்கிய அம்சங்கள்

   14-இன்ச் முன் சக்கரம், 12-இன்ச் பின்சக்கரம்
   Bluetooth connectivity, navigation, OTA updates
   Hill hold assist, cruise control, parking assist
   LED lights, digital cluster, USB charging port
6 வண்ணங்களில் கிடைக்கும்: Neon Sunburst, Stratos Blue, Lunar Grey, Stellar Silver, Cosmic Titanium, Martian Copper. 
TVS Orbiter, நகர்ப்புற பயணிகளுக்கான வசதி, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப இணைப்புகளை ஒருங்கிணைத்துள்ளது.

விலை மற்றும் அம்சங்களைப் பொருத்தவரை, இது இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில் போட்டி திறனை அதிகரிக்கும் வகையில் பார்க்கப்படுகிறது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்