Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் மீண்டும் அதிகரித்த பணவீக்கம்

இலங்கையில் மீண்டும் அதிகரித்த பணவீக்கம்

21 தை 2026 புதன் 18:00 | பார்வைகள் : 652


தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று (21) வெளியிட்டுள்ள தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையிலான பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 2.4% ஆகக் காணப்பட்ட முதன்மை பணவீக்கம், டிசம்பர் மாதத்தில் 2.9% ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் நவம்பர் மாதம் 3.6% ஆக இருந்த உணவு பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் 4.4% ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் கடந்த நவம்பர் மாதத்தில் 1.5% ஆகக் காணப்பட்ட உணவு அல்லாப் பணவீக்கம், டிசம்பர் மாதத்தில் 1.6% ஆக அதிகரிப்பை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்