பிரதமர் மோடி தமிழகம் வருகை - பயண திட்டம் வெளியீடு
22 தை 2026 வியாழன் 06:23 | பார்வைகள் : 101
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வரும் 23-ந்தேதி நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடியின் பயண திட்டம் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் 23-ந்தேதி மதியம் 2.15 மணிக்கு சென்னை வருகிறார்.
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மதியம் 2.50 மணிக்கு மதுராந்தகம் வந்தடைகிறார். மதியம் 3 மணி முதல் 4.15 மணி வரை செங்கல்பட்டு பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பின்னர் மாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்ல உள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan